தஞ்சாவூர் ஜூன்.27- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நகரின் மையத்தில் பொதுப்பணித் துறை அலுவலகம் அமைந்துள்ளது. இங்குள்ள வளாகத்தில் நீர்வள ஆதா ரத்துறை, பாசன உட்கோட்டம் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் உள் ளிட்ட அலுவலகங்கள் இயங்கி வரு கின்றன. இந்த அலுவலகத்தை சுற்றி லும் நீண்ட சுற்றுச்சுவர் அமைக்கப்பட் டது. இதில் கடந்த ஆண்டு வீசிய கஜா புயல் காரணமாக பல இடங்களில் சுற் றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதனை 8 மாதமாகியும் சீரமைக்காமல் உள்ளனர். அலுவலக வளாகத்தில் விலை உயர்ந்த தேக்கு போன்ற மரங்கள் வெட்டி அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனை சமூக விரோதிகள் திருடிச் செல்லும் அபாயம் உள்ளது. மேலும் சுற்றுச்சுவர் இல்லாமல் திறந்து கிடப்பதால், அங்குள்ள கட்டிடங்களில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் அமர்ந்து மது அருந்துதல் மற்றும் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடும் அபாயம் உள்ளது. எனவே பொதுப்பணித்துறை அலு வலக வளாகத்தில் சேதமடைந்த நிலை யில் உள்ள சுற்றுச்சுவரை சீரமைப்ப தோடு, வளாகத்தில் உள்ள புதர்களை அகற்றி சுத்தம் செய்து, கரையான் அரி த்து வீணாகி வரும் விலை உயர்ந்த மரங்களை பாதுகாக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர் வேத.குஞ்சருளன் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.