tamilnadu

img

நீதிமன்ற உத்தரவை மீறி மதுக்கடை திறப்பதா?

சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம் 

தஞ்சாவூர், ஜன.20- நீதிமன்ற உத்தரவை மீறி, மதுக் கடை திறப்பதைக் கண்டித்து, மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருக் காட்டுப்பள்ளியில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தேசிய நெடுஞ்சாலையில் மதுக் கடைகளை அமைக்கக்கூடாது என்ற  உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் வகை யில், பொதுமக்கள் எதிர்ப்பை கவனத்தில் கொள்ளாமல் திருக்காட்டுப்பள்ளியில் கல்லணை- பூம்புகார் தேசிய நெடுஞ் சாலையில் டாஸ்மாக் மதுக்கடை திறப்ப தைக் கண்டித்து, திருக்காட்டுப்பள்ளி காந்தி சிலை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் பூதலூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.காந்தி தலைமை வகித்தார். மாவட்டச் செயற் குழு உறுப்பினர் வழக்கறிஞர் வெ.ஜீவ குமார் கண்டன உரையாற்றினார். சி.சிவ சாமி, எம்.சம்சுதீன், பி.முருகேசன், மாதர் சங்கம் பி.கலைச்செல்வி, விவசாயி கள் சங்கம் ஆர்.உதயகுமார், ஏ.செபஸ் தியார், வாலிபர் சங்கம் டி.ஸ்ரீதர் ஆகி யோர் பேசினர்.  மைக்கேல்பட்டி செபஸ்டீன்ராஜ், அகரப்பேட்டை ஏ.சத்தியமூர்த்தி, பழ மார்நேரி ஏ.ஜஸ்டீன், ஆற்காடு கே.அறி வுறுவோன், இளங்காடு பி.தாமரைச் செல்வன், பாபநாசம் படுகை இ.பன்னீர் செல்வம், பவனமங்கலம் பி.பாலசந்தர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மதுக்கடையை மூட வலியுறுத்தி முழக் கங்களை எழுப்பினர். 

இதுகுறித்து மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் வெ.ஜீவகுமார் கூறுகையில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தினால், மூடப்பட்ட மதுக்கடையை, பொங்கலுக்கு முதல் நாள் அவசரஅவசரமாகத் திறந்து உள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை, அதிகாரிகள் அப்பட்டமாக மீறி உள்ளனர்.  மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதுகுறித்து விசாரணை நடத்தி, மதுக்கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தவறிழைத்த அதிகாரி கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பொதுமக்களைத் திரட்டி மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்” என்றார்.

;