tamilnadu

img

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த விட மாட்டோம்

கும்பகோணம், ஜூலை 2- உலகத்திற்கே சோறு போட்ட காவிரி டெல்டா பகுதி விவ சாய நிலங்களை பாழ்படுத்தி, விவசாயிகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி எவ்வித எதிர்ப்பையும் மதிக்காமல் தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் திட்டமான மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து, விவசாயி களுக்காக குரல் கொடுத்த போராளி சிபிஎம் மூத்த தலை வர்களில் ஒருவரான பி.ராமமூர்த்தி பிறந்த தஞ்சை மாவட்டம் வேப்பத்தூர் கிராமத்தில் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றி யம் சார்பில் தமிழ்நாடு விவசாய சங்கப் பேரவைக் கூட்டம் கே. குமார் தலைமையில் நடைபெற்றது. பேரவைக் கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன் மாவட்டத் தலைவர் பி. செந்தில்குமார் சிபிஎம் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் சா.ஜீவபாரதி மாவட்டக்குழு உறுப்பினர் ஜி. பக்கிரிசாமி சங்கப் பொறுப்பாளர் என்.கணேசன் மற்றும் விவ சாயிகள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில், மத்திய அரசு செயல்படுத்தும், மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட நாசகர திட்டத்தையும் செயல்படுத்த விட மாட்டோம் என விவசாயிகள் உறுதியேற்று கொண்டனர். மேலும் வேப்பத் தூர் பகுதியில் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் நிரந்தரமான திறக்க வேண்டும். திருவிடைமருதூர் ஒன்றியம் முழுவதும் உள்ள வாய்க்கால் குளங்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.