tamilnadu

img

திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து திருவாரூர் சட்டமன்ற தொகுதி

சீர்காழி, ஏப்.17 -நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மாதிரவேளூர், வடரெங்கம், குன்னம், அகர எலத்தூர், சோதியகுடி ஆகிய ஊராட்சிகளில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைஉறுதியளிப்புத் திட்டத்தின் கீழ்கண்ட டிசம்பர் மாதம் பணியில் ஈடுபட்டனர்.இந்த பணியில் 2 ஆயிரம் தொழிலாளார்கள் ஈடுபட்டனர். இதுவரை அவர்களுக்கு அதற்கான ஊதியம் வழங்கவில்லை. ஊதியம் கேட்டு பலமுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அணுகி கேட்ட போது, பணியில் ஈடுபட்டவர்களின் வங்கிக் கணக்குகளில் ஊதியத் தொகை வரவு வைக்கப்படுவது வழக்கம். ஆனால் 4 மாதங்களைகடந்தும் வங்கிக் கணக்கில் ஊதியத் தொகை வந்து சேரவில்லை என தெரிவித்தனர். இதுகுறித்து நுகர்வோர் பாதுகாப்பு திட்ட மாவட்டச் செயலாளார் செந்தில் குமார் கூறுகையில், நூற நாள் வேலையில் ஈடுபட்ட ஏழை எளியத் தொழிலாளார்கள் தங்களின் குடும்ப செலவுக்காகவும், வறுமையின் காரணமாகவும் நூறு நாள் வேலைக்குச் செல்கின்றனர். ஆனால் அவர் களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்கவில்லை. தேசிய ஊரக வேலைஉறுதியளிப்புத் திட்டம் சட்டமாக்கப் பட்டு, ஊதியம் வழங்காமலிருப்பது சட்டத்தை மீறுவதாக அமையும். எனவே ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளார்களின் நலன் கருதி 4 மாதமாக வழங்கத் தவறிய ஊதியத் தொகையைஉடனடியாக வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

;