tamilnadu

img

அரசு மருத்துவமனையில் மின் உபகரணங்கள் திருட்டு

தஞ்சாவூர், ஏப்.26-பேராவூரணியை அடுத்துள்ள செருவா விடுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. இதன் வளாகத்தில் நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் குடிநீர் வசதிக்காக நீர்மூழ்கி மோட்டார் இயங்கி வருகிறது. இதற்காக மோட்டார் ரூம் தனியாக கட்டப்பட்டு அதில் மோட்டாருக்கான ஸ்டாட்டரும் பொரு த்தப்ப ட்டிருந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை பிற்பகல் வரை இந்த மோட்டார் இயங்கி கொண்டிருந்தது. இடையில் மின் தடை ஏற்பட்டது. பின்னர் மின் மோட்டாரை மீண்டும் இயக்க மருத்துவமனை ஊழியர்கள் மோட்டார் ரூமிற்கு சென்று பார்த்த போது மின் ஒயர், ஸ்டாட்டர் திருடு போனது தெரிந்தது. இதனால் மின் மோட்டார் இயக்க முடியவில்லை. நோயாளிகள் தண்ணீர் வசதி இன்றி சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலர் சௌந்தர்ராஜன், திருச்சிற்றம்பலம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். மாவட்டத்திலேயே ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்ற இந்த ஆரம்ப சுகாதார நிலைய சுற்றுச்சுவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் தேதி வீசிய கஜா புயல் காரணமாக இடிந்து விழுந்தது. பின்னர் சுற்றுச்சுவர் சீரமைக்கப்படவில்லை. இதனால் கால்நடைகள் மற்றும் பாம்புகள் உள்ளிட்டவை மருத்துவமனைக்கு புகுந்து நோயாளிகளுக்கு அச்சம் ஏற்படுத்தி வருகின்றன. தற்போது மின் உபகரணங்கள் திருடு போயுள்ளன. எனவே உடனடியாக சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் பா.பாலசுப்பிரமணியன் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

;