tamilnadu

img

நூறு நாள் வேலை வழங்க கோரி போராட்டம்

மண்ணச்சநல்லூர், ஜூலை 11- திருச்சி மாவட்டம் மண்ணச்ச நல்லூர் ஒன்றியம் மேல்பத்து ஊராட்சி யில் நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் பல விவசாயத் தொழிலாளர்கள் பலனடைந்து வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இவர்களுக்கு நூறு நாள் திட்டத்தில் எந்த வேலையும் வழங்கப்படவில்லை. அதனால் போதிய வருமானம் இல்லாமல் குடும்பம் நடத்தவே அவர்கள் சிரமப்பட்டனர். இதைய டுத்து நூற்றுக்கும் மேற்பட்ட விவ சாயத் தொழிலாளர்கள் ஒன்று கூடி தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்க மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் சி.முருகேசன் தலை மையில் மண்ணச்சநல்லூர் ஒன்றிய அலுவலகத்தை வியாழனன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.   அவர்களை, அதிகாரிகள் சமாதானப்படுத்தி கோரிக்கைகளை பரிசீலித்து இன்னும் பத்து நாளில் வேலை தருவதாக உறுதியளித்தனர். பின்னர் அவர்கள் கோரிக்கை மனுவை தனித் தனியே அளித்தனர். தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஜெ.சுப்ரமணியன், ஒன்றிய தலைவர் ஏ.கருணாநிதி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.ஜி. ரவிச்சந்திரன், விவசாயத் தொழிலா ளர் சங்க மேல்பத்து ஊராட்சி கிளை நிர்வாகிகள் எம்.செல்வி, ஆர்.ராணி, கே.அனு, எஸ்.அமிர்தவள்ளி, சி.கல் யாணி உள்பட ஏராளமானோர் பலர் கலந்து கொண்டனர்.

;