tamilnadu

img

காணும் பொங்கலில் களையிழந்து கிடந்த கொள்ளிடம் ஆற்றுக்கரை

சீர்காழி: நாகை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச்சாவடி அருகே கொள்ளிடம் ஆற்று மணற்பரப்பில் வருடந்தோறும் காணும் பொங்கல் அன்று காலை முதல் இரவு வரை மக்கள் கூட்டம் அலைமோதும். ஆற்று மணலில் கபாடிபோட்டி, பெண்களுக்கான பல வகையான விளையாட்டு போட்டிகள், குழந்தைகளுக்கான ராட்டினம் மற்றும் இளையவர்கள் முதல் முதியவர்கள் வரை வந்து கண்டுகளித்து வந்தனர்.  நாகை மற்றும் கடலூர் மாவட்ட கொள்ளிடம் ஆற்று  கரையோரமுள்ள 200 க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கும் காணும் பொங்கல் விழா கொள்ளிடம் ஆறு மிகவும் அழகாகக் காணப்பட்டது. ஆனால் கடந்த சில வருடங்களில் மக்கள் வருகை அப்படியே குறைந்து விட்டது. இதனால் கொள்ளிடம் ஆறு வெறிச்சோடியது. பல ஆயிரம் பேர் கூடிய கொள்ளிடம் ஆற்றின் மணல் பகுதியை இன்று கருவேல முள்செடிகள் சூழ்ந்துள்ளன.  மேலும் இப்பகுதிக்கு வரும் மக்களுக்கு உரிய பாதுகாப்பும் இல்லாமல் உள்ளது. எனவே இனிவரும் காலங்களில் காணும் பொங்கல் சிறப்பாக நடைபெற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

;