tamilnadu

img

வாலிபர் சங்கம் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, மே 13- அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58லிருந்து 59ஆக உயர்த்துவதை கைவிட வேண்டும். 8 மணிநேர வேலையை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வாலிபர் சங்கம் சார்பில் மணப்பாறை பஸ்ஸ்டாண்டு அருகில் உள்ள பெரியார்சிலை முன்பு போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்திற்கு புறநகர் மாவட்ட தலைவர் பாலு தலைமை வகித்தார். போராட்டத்தில் ஈடுபட்ட வட்ட தலைவர் இளையராஜா, ரியாஸ், கோகுல், கலைவாணன் உள்ளிட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.  திருவெறும்பூரில் மாநகர் மாவட்ட செய லாளர் லெனின், பாலக்கரையில் மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ், கீழப்புதூரில் பகுதி செயலாளர் இரட்டைமலை ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. வையம்பட்டி ஒன்றியத்தில் இனாம்புதூரில் கிளை செயலாளர் மனோகரன் தலைமை யில் நடைபெற்ற போராட்டத்தில் நிர்வாகிகள் தேவேந்திரன், சிவா, சசி, சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.