tamilnadu

img

தலித் மக்கள் சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பு

நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் சிபிஎம் மனு

பெரம்பலூர், நவ.25- பெரம்பலூரில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்களன்று ஆட்சியர் வே.சாந்தா தலைமை யில் நடைபெற்றது. அதில், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் குன்னுமேட்டு காலனி தலித் மக்கள் 50 க்கும் மேற்பட்டோர் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.  அம்மனுவில், செட்டிகுளம் குன்னுமேட்டு காலனியில் தலித் மற்றும் தலித் கிறிஸ்தவ மக்கள் என 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களு க்கு மேல் வசித்து வருகின்றனர். அவர்களுக் கென தனி சுடுகாடு ஒதுக்கப்பட்டு சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வரு கின்றனர். தற்போது செட்டிகுளம் கிராமத்தை சேர்ந்த ஆதிக்க சாதியை சேர்ந்த 40 க்கும் மேற்பட்டோர் தலித் மக்கள் பயன்படுத்தி வரும் மயான பாதையை ஆக்கிரமித்து, இந்த பாதையில் நீங்கள் சுடுகாட்டிற்கு செல்ல நாங்கள் அனுமதிக்க மாட்டோம் எனக் கூறிய தோடு இந்த பாதை எங்களது குடும்பத்தார் பெயரில் பட்டாவாக உள்ளது.  இந்த பாதையில் சடலம் தூக்கிச் செல்ல அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி தடுத்த தோடு பாதையினை மறித்து கம்பி வேலி அமைத்து கேட் போட்டு பூட்டி விட்டனர். பின்னர் ஆலத்தூர் வட்டாட்சியர் தலைமை யில் நடத்திய இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது பாதையை மறித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக செயல்படும் வித மாக பாதை செல்லும் பகுதி அவர்கள் பெயரில் பட்டாவாக உள்ளது. எனவே தலித் மக்கள் மயானத்திற்கு செல்ல வேறு பாதை அமைத்து தருவதாக கூறி பேச்சுவார்த்தை யினை முடித்து விட்டார். ஆனால் வட்டாட்சியர் கூறிய ஓடை வழி யில் அங்காயி கோயில் அமைந்துள்ளதால் அங்கு பாதை அமைக்கப்படும் பட்சத்தில் அதனை வழிபடும் மக்கள் எதிர்ப்பு தெரி விக்கும் சூழல் உள்ள நிலையில் தலித் மக்களு க்கு வட்டாட்சியர் உறுதிமொழி அளித்தபடி பாதை அமைத்துத் தர வழியில்லை. சுடு காட்டிற்கு செல்ல வழியில்லாததால் தலித் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே ஆட்சியர், இப்பாதையை மறித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சி யர், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரி வித்துள்ளார். பின்னர் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளரிடமும் புகார் மனு அளித்தனர். முன்னதாக ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் கிராம மக்களு டன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தீ.ஒ.மு. மாவட்டத் தலைவர் என்.செல்ல துரை, மாவட்டச் செயலாளர் எம்.கருணாநிதி, சிபிஎம் வட்டச் செயலாளர் எஸ்.பி.டி.ராஜாங் கம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ரமேஷ், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.முருகேசன், வட்டக்குழு பி.கிருஷ்ணசாமி, எம்.செல்லதுரை மற்றும் கிராம பொது மக்கள் செல்வகுமார், செல்வராஜ், லாரன்ஸ்,  பிலவேந்திரன், சசிக்குமார், ராஜா, பிச்சைமணி, பொன்னுசாமி, வேளாங் கண்ணி, மாணிக்கம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.