tamilnadu

img

அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனையில் புகுத்தப்படும் தீண்டாமையின் நவீன வடிவம்

திருச்சிராப்பள்ளி, அக்.22- திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்களன்று நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் வினோத் மணி மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில், ஸ்ரீரங்கம் பகுதியில் மேலூர் ரோட்டில் லெட்சுமி நகரில் அமைந்துள்ள (ஸ்ரீ சக்தி ரெங்கா) சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் விற்பனை என்ற விளம்பரம் 20.10.19-ல் நாளிதழில் வந்துள்ளது.  இதில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கும் மட்டும் தான் விற்பனை என குறிப்பிடப் பட்டுள்ளது. மற்ற அனைத்து சாதி, மதம் சார்ந்த குடும்பங் களுக்கு வீடுகள் இல்லை என்பதும், குறிப்பிட்டு தலித், சிறு பான்மை மக்களுக்கு குடியிருப்பு வீடுகள் இல்லை என்பதே விளம்பரத்தின் நோக்கமாக உள்ளது. இந்த செயல் தீண்டாமை யின் நவீன வடிவமாகும். சொகுசு குடியிருப்பு வீடுகள் விற்ப னையாளர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் முதல் தக வல் அறிக்கை பதிந்து உரிய விசாரணை செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம் என மனுவில் தெரிவித்திருந்தார்.