பொன்னமராவதி, ஜூன் 29- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி தலைமையில் நடைபெற்றது. நகரச் செயலாளர் அழகப்பன் வரவேற்றார். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அழகப்பன், ஒன்றிய பொருளாளர் மணி அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதி சிக்கந்தர், காளிதாஸ், மீனாட்சி சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில கலை இலக்கிய பேரவை துணைச் செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி மற்றும் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளரும் திருமயம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான எஸ்.ரகுபதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னாள் எம்எல்ஏ ஆலவயல் சுப்பையா, வடக்கு ஒன்றியச் செயலாளர் முத்து, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராமன், மாவட்ட துணை செயலாளர் சின்னையா, முன்னாள் நகர செயலாளர் கோவை ராமன், முன்னாள் ஒன்றிய செயலாளர் அய்யாவு, திருமயம் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஆலவயல் முரளி சுப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா நன்றி கூறினார்.