tamilnadu

தஞ்சாவூர் ,மன்னார்குடி முக்கிய செய்திகள்

காவிரிப் படுகை பாதுகாப்பு  கூட்டியக்க ஆலோசனைக் கூட்டம்

தஞ்சாவூர், ஜூலை 3- பேராவூரணியில் காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டி யக்கத்தின் சார்பில் வரும் ஜூலை 9-ம் தேதி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறவுள்ள விவசாயிகளின் பேரணியை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்.எல்.ஏ சிங்காரம்(காங்) தலைமை வகித்தார். விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் கருணா மூர்த்தி வரவேற்றார். இக்கூட்டத்தில்,  ஜூலை 9-ம் தேதி அன்று, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி, ஆயிரக்கணக்கான விவ சாயிகள் பங்கேற்கும் பேரணி நடத்துவது பற்றி ஆலோ சிக்கப்பட்டது.  மேலும், அனைத்துக் கட்சிகளின் சார்பில் ஆயிரக்க ணக்கானோர் தஞ்சையில் நடக்கும் பேரணியில் கலந்து கொள்வது. தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பி னர்கள் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது. தஞ்சைப் பேரணிக்கு பிறகும் கிராமம் கிராமமாக சென்று மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஹைட்ரோகார்பன் திட்டத்தை காவிரி பாசனப் பகுதிகளில் இருந்து விரட்டி அடிப்பது” என தீர்மானிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செய லாளர்கள் என்.வி.கண்ணன், (சிபிஎம்), பா.பாலசுந்தரம் (சிபிஐ), பேராவூரணி முன்னாள் பேரூராட்சி தலைவர் அசோக்குமார் (திமுக), திமுக நகரச்செயலாளர் தனம் நீலகண்டன், தமிழக மக்கள் புரட்சி கழகத் தலைவர் அரங்க குணசேகரன், தாளாண்மை உழவர் இயக்க தலைவர் திரு நாவுக்கரசு, மதிமுக பாலு, குமார், மக்கள் அதிகாரம் காளியப்பன், மக்கள் கலை இலக்கியக் கழகம் மாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்.எஸ்.வேலுச்சாமி, ஏ.வி. குமாரசாமி, மனிதநேய ஜனநாயக அப்துல் சலாம், தமி ழக மக்கள் புரட்சி கழகம் ஆறுநீலகண்டன், மெய்ச்சுடர் வெங்கடேசன், திராவிடர் விடுதலைக் கழகம் சித.திரு வேங்கடம், அனைத்து கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஜுலை 5 மதுரையில் வேலம்மாள்  மெரிட் ஸ்காலர்ஷிப் வழங்கும் விழா

மன்னார்குடி, ஜுலை 3- வேலம்மாள் மெரிட் ஸ்காலர்ஷிப் வழங்கும் விழா ஜுலை 5-ம் தேதி மதுரையில் நடைபெறுகிறது. வேலம்மாள் கல்விக் குழும அறக்கட்டளையின் கீழ் வேலம்மாள் கம்யூனிட்டி சர்வீசஸ் தொடங்கப்பட்டு, மருத்துவசேவை, கல்விப் பணிகளை செய்ய ஆண்டுக்கு ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.  மதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை, விருது நகர், புதுக்கோட்டை, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்க ளில் படித்து முடித்து வேலை தேடும் இளைஞர்கள் சுமார் 450 பேருக்கு வேலை வாய்ப்பு அளிப்பது, 8-ம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பல்வேறு துறைகளில் சேர்வதற்கு அவர்களை தயார்ப்படுத்திட வழிகாட்டு நிகழ்ச்சிகள் வேலம்மாள் கம்யூனிட்டி சர்வீஸ் சார்பில் 9 மாவட்ட தலைநகரங்களில் கடந்த மே மாதம் நடை பெற்றன. இதில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.  மேற்கண்ட வழிகாட்டு நிகழ்ச்சியில் 9 மாவட்டங்களில் மிகவும் பின் தங்கிய 90 மாணவ-மாணவிகள் அரசு, அரசு உதவி பெறும் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.  இவர்களில் முதல் கட்டமாக 65 பேருக்கு வேலம்மாள் மெரிட் ஸ்காலர்ஷிப் ரூ.25 ஆயிரம் வழங்குகிறது. இதற்கான விழா மதுரை வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளா கத்தில் உள்ள காமராசர் அரங்கில் ஜுலை 5-ம் தேதி (வெள்ளிக் கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம் பங்கேற்று கல்வி உதவித்தொகையை வழங்கவுள்ளார்.

அதிராம்பட்டினத்தில்  கடல் உள்வாங்கியது

தஞ்சாவூர், ஜூலை 3- அதிராம்பட்டினம் கடற்பகுதியில் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சமடைந்த னர். தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம், ஏரிப்புறக் கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட மீனவ கிராமப்பகுதிகளில் உள்ள மீனவர்கள் புதன்கிழமை அதிகாலை 3 மணி அள வில் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வதற்காக, மீன்பிடித் துறைமுகம் வந்தனர். அங்கு வந்து பார்த்தபோது, துறை முக வாய்க்காலில் 6 அடி அளவில் தண்ணீரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் அனைத்தும் தண்ணீரின்றி தரை தட்டி நின்றன.  இதைத் தொடர்ந்து மீனவர்கள் கடல் பகுதிக்கு சென்ற பார்த்த போது, அங்கு  அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு கடல் உள் வாங்கியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த னர். இத்தகவல் அறிந்த பொதுமக்கள் கடற்கரையில் குவிந்தனர். இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ‘கஜா புயலுக்கு பிறகு கடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள் ளன. இப்போது மூன்றாவது முறையாக கடல் உள் வாங்கி யுள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை அதிக தூரம் உள்வாங்கியுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அரை கிலோ மீட்டர் துாரத்திற்கு கடல் உள்வாங்கியிருப்பது இதுவே முதல் முறையாகும்’ என்றனர்.