பழுதான தெரு விளக்குகளை சரி செய்யக் கோரிக்கை
தஞ்சாவூர், நவ.8- தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் ஒன்றியம், கிளா மங்கலம் ஊராட்சி கிளாமங்கலம் தெற்கு பகுதியில் தெரு விளக்குகள் பழுதாகி எரியாமல் உள்ளது. இதனை உடனடியாக சரி செய்து தர கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கிளாமங்கலம் கிளை சார்பாக கிளைத் தலைவர் கோ.திங்கள்கண்ணன் தலைமையில், கிளைச் செயலாளர் வீ.கல்யாணசுந்தரம், கிளாமங்கலம் ஊரா ட்சிச் செயலாளர் ந.அமுதாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இதில் துணை செயலாளர் ஜோ.தமிழர சன், கிளைத் தோழர்கள் சி.சசிகுமார், க.ஸ்டாலின், ஜோ. ராஜா, ரா.வினோத், ந.புகழேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தனியார் பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த கால அவகாசம் அளிக்க கோரிக்கை
தஞ்சாவூர், நவ.8- தனியார் பள்ளி வாகனங்க ளில் ஜிபிஎஸ் கருவி, சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும் என்ற தமிழக அரசின் ஆணையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் அல்லது ஆறு மாத கால அவகா சம் வழங்க வேண்டும் என தமிழ் நாடு மெட்ரிக் பள்ளிகள் சங்கம், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாள ருக்கு கோரிக்கை மனு அனுப்பி யுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் நந்த குமார், மாநில துணைப் பொதுச் செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் அனுப்பியுள்ள மனுவில், “சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி தனியார் பள்ளி வாகனங்களில் மட்டும் ஜிபிஎஸ் கருவி மற்றும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது. தனியார் பள்ளிகள் உடனடி யாக செய்திட வேண்டுமென்று தமிழகம் முழுக்க அனைத்து வட்டார போக்குவரத்து அலுவ லகம் மூலமாகவும், கல்வித்துறை அதிகாரிகள் மூலமாகவும் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி வருகிறார்கள். அமெ ரிக்கா நாட்டில் சாதாரணமாக ஜிபி ஆர்எஸ் போட்டதால் இந்திய அரசு முழுமையாக அறிவித்தவு டன் விடிஎஸ் 140 இயங்கும் நிலை க்கு வந்தவுடன் அனைத்து பள்ளி வாகனங்களுக்கு ஜி.பி.எஸ் கருவி, சிசிடிவி கேமரா போடப் பட்டால் சிறப்பாக இயங்கும். அப்போது தான் பள்ளிகளு க்கு பண சுமையும் கால விரயமும் இன்றி நம் அனைவரையும் பாது காப்பை உறுதி செய்யும் நடவ டிக்கைகள் முழுமை பெறும் அதுவரையில் கால அவகாசம் குறைந்த பட்சம் ஆறு மாதமாக வழங்கிட வேண்டும். மேலும் சிசிடிவி கேமரா பொருத்தினால் அதுவும் சில காலம் தான் வேலை செய்யும், அதுமட்டுமில்லாமல் அதனால் பல்வேறு பிரச்சனை கள் பெற்றோர்கள் பொதுமக்கள் மூலமாக வருவதற்கும் வாய்ப்பி ருக்கிறது. யாரோ ஒருவர் எங்கோ தவறு செய்தார் என்பதற்கு தனி யார் பள்ளி வாகனங்களை மட்டும் இப்படி பழிவாங்குவதால் ஒவ்வொரு பள்ளி நிர்வாகிக ளுக்கும் பத்துக்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களை வைத்தி ருப்பதால் ஒவ்வொருவருக்கும் லட்சக்கணக்கில் செலவழிக்க வேண்டி உள்ளது. ஏற்கனவே பல்வேறு சிக்கல்கள் பாதுகாப்பு விஷயத்தில் இருக்கிறது. பள்ளி நிர்வாகம் அனைத்தும் மிக கவனமாக இருக்கின்றோம்” என்று மனு கூறியுள்ளது.
நவ.15-ல் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்
கும்பகோணம், நவ.8- சிபிஎம் கட்சிக் கிளைக் கூட்டம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பழைய பேருந்து நிலையத்தில் அறிவுராணி தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தயாரிப்பு பணிகள், மக்கள் பிரச்சனைகளில் எடுக்க வேண்டிய, நடவடிக்கைகள் குறித்தும், மாவட்டக்குழு, நகரக் குழு முடிவுகள் பற்றி கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னை. பாண்டியன் விளக்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏடான தீக்கதிர் நாளிதழ் வாசிப்பு, மாதாந்திர அரசியல் வகுப்பு பற்றி நகரக்குழு முடிவுகளை நகரக் குழு உறுப்பினர் ஆர்.ராஜகோபாலன் விளக்கினார். மேலும் கூட்டத்தில் கிளைப் பகுதிகளில் உள்ள மக்கள் பிரச்சனைகளில் குறிப்பாக கும்பகோணம் பீமன் தெருவில் மழைக் காலத்தில் மக்கள் நடமாட்டத்திற்கு இடை யூறாக தேங்கும் தண்ணீரை அப்புறப்படுத்த வடிகால் வசதி ஏற்படுத்த தெருவாசிகளிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி நகராட்சி ஆணையரிடம் அளிப்பது. நகர் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளின் தொல்லைகளிலி ருந்து மக்களை பாதுகாக்குமாறு நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை வைப்பது. வரும் நவம்பர் மாதம் 15-ல் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடத்துவது உள்ளிட்டவை தீர்மா னிக்கப்பட்டன.
உயர்ந்த உள்ளம் திட்ட நிகழ்ச்சி
அறந்தாங்கி, நவ.8- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ரோட்டரி கிளப் மற்றும் தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி கிளப் இணைந்து உயர்ந்த உள்ளம் திட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரோட்டரி கிளப் தலைவர் க.சுரேஷ்குமார் தலைமை வகித்தார். தசாவதாரம் தலைவர் பெலிக்ஸ் ராஜ், ரோட்டரி துணை ஆளுநர் கராத்தே கன்னையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி தலைவர் விஜய், செயலாளர் பாரி, அறந்தாங்கி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் வருங்கால தலைவர்கள், செயலாளர் வீரையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி திட்டத்தின் சிறப்பாக அனைத்து உறுப்பினர்களின் பங்களிப்பாக ரோட்டரி பவுன்டேசனுக்கு ஒவ்வொரு உறுப்பினர்களும் நிதி வழங்கினர். நிறைவாக செயலாளர் நன்றி கூறினார்.