தமிழ் பேச்சுப் போட்டி மாணவர்களுக்கு பரிசளிப்பு
தஞ்சாவூர், நவ.16- தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள சித்துக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் பால.சண்முகவேலன் தலைமை வகித்தார். மாணவ, மாணவியர்களுக்கு தமிழ், ஆங்கிலப் பேச்சுப் போட்டிகள் ஒவ்வொரு பிரிவுகளுக்கும் தனித்தனியாக நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயங்கள் மற்றும் பரிசுகளை பெற்றோர்கள் முன்னிலையில் திருச்சிற்றம்பலம் காவல் ஆய்வாளர் ஆர். ரேணுகாதேவி வழங்கினார். நிறைவாக தமிழாசிரியர் தனபாக்கி யம் நன்றி கூறினார். இதே போல் கரிசவயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு தலைமை ஆசிரியர் வி.பன்னீர் செல்வம் தலைமை வகித்தார். உதவும் கரங்கள் அமைப்பு சார்பில் இனிப்பு, பிஸ்கட் வழங்கப்பட்டது.தொடர்ந்து மரக்கன்று நடப்பட்டது. உதவும் கரங்கள் உறுப்பினர் ஷமீம் அப்பாஸ் முகமது யாசீன் பள்ளிக்கு ரூ 5 ஆயிரம் நன்கொடை வழங்கினார். இடையாத்தி கிழக்கு தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினம், கஜா புயல் நினைவு தினம், மரக்கன்றுகள் வழங்கல் ஆகிய முப்பெரும் விழா பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரெ.ராஜலட்சுமி தலைமை யில் நடைபெற்றது. விழாவில் சென்னை பொறியாளர் இர.வெங்கட்ராமன் மாண வர்களுக்கு குறிப்பேடுகள், எழுதுபொருட்கள் போன்றவற்றை தனது சொந்த நிதியிலிருந்து, சொர்ணக்காடு தொடக்கப்பள்ளி, இடையாத்தி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கினார். விழாவில் சொர்ணக்காடு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சு. விஜயபாஸ்கர், ராமகிருஷ்ணன், தலைமையாசிரியர்கள் வி.இராமச் சந்திரன், சு.தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டனர். முன்னதாக இடை யாத்தி பள்ளி தலைமை ஆசிரியர் வீர. சந்திரசேகரன் வரவேற்றார். ஆசிரியை அமுதா பிரியதர்ஷினி நன்றி கூறினார்.
அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் இன்டர்நேஷனல் பள்ளி (சிபிஎஸ்இ) இணைந்து குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தண்ணீர் சேமிப்பு பற்றி மாணவர்களின் வடிவமைப்பு மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியை கள் கலந்து கொண்ட பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பள்ளி தாளா ளர் சி.கன்னையா, பள்ளி முதல்வர் க.சுரேஷ்குமார், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மழைநீர் தேங்கிய சாலையை சீரமைத்த சிஐடியு ஆட்டோ சங்கத் தொழிலாளர்கள்
தஞ்சாவூர், நவ.17- தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே உள்ள, ஊரணிபுரம் கடைவீதியில் சாலையின் இருபுறமும் உள்ள மழைநீர் வடிகால் வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டு, சிறிய மழைக்கே தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் பேருந்துகள் செல்லும் போது, சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர் பாதசாரி கள் மீது பட்டு, உடைகள் வீணாவதும், நடந்து செல்வோர் தவறி விழுந்து அடிபடுவதும் வாடிக்கையாக இருந்தது. மேலும் தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் கொசுப்புழு உற்பத்தியாகி, சுகாதாரச் சீர்கேடு ஏற்பட காரணமாக இருந்தது. இது குறித்து அரசுத் துறை அலுவலர்களுக்கு பலமுறை தகவல் தெரி விக்கப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஊரணிபுரம் சிஐடியு ஆட்டோ சங்கத் தொழிலாளர்கள் களத்தில் இறங்கினர். மழை நீர் வடிகால் அடைப்புகளை சரி செய்து, சாலையில் தண்ணீர் தேங்கிக் கிடந்த இடங்களில் 4 டிப்பர் லாரிகளில் மண் மற்றும் உடைந்த செங்கல்கற்களை கொட்டியும் சீரமைத்து, தங்கள் சொந்தச் செலவில் சாலையை சரி செய்தனர். சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.வாசு ஆகியோர் ஆட்டோ சங்கத் தலைவர் ஆர்.முருகேசன், துணைத் தலைவர் மனோகரன், செயலாளர் ரெங்கசாமி, துணைச் செயலாளர் கணேசன், பொருளாளர் சேட்டு, துணைப் பொருளாளர் லெட்சுமணன் மற்றும் ஆட்டோ சங்கத் தொழிலாளர்களை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தனர். மேலும் அரசு செய்ய வேண்டிய பணிகளை, தன்னார்வ லர்களாக தாமாகவே முன்வந்து சாலையை சீரமைத்த ஆட்டோ சங்கத் தொழிலாளர்களை பொதுமக்கள் பாராட்டி னர்.