கொரோனா வைரஸ் காரணமாக ஏப்ரல் 13 வரை 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சியில் தினமும் ஆட்டோ ஓட்டி வாழ்க்கை நடத்தும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்களுக்கு அறம் மக்கள் நலச் சங்கம் சார்பில் ஒரு மாதத்திற்கானஅ உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் 25 கிலோ அரிசி கொண்ட சிப்பம், கோதுமை மாவு 5 கிலோ, சன் பிளவர் ஆயில் மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை சங்கத்தின் தலைவர் ராஜா மற்றும் எஸ்.ஆர்.கே ரமேஷ்குமார் ஆகியோர் வழங்கினர்.