tamilnadu

img

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒருவர் தற்கொலை

திருச்சி அருகே உள்ள சவேரியார்புரத்தைச் சேர்ந்த வில்சன் (26) என்பவர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனை தடுக்கும் நோக்கில் தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை 2வது முறையாக நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காத நிலையில், உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அருகே உள்ள சவேரியார்புரத்தைச் சேர்ந்தவர் வில்சன் என்பவர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இவர் கோவையில் வடை, பஜ்ஜி போடும் மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார். 3 நாட்களுக்கு முன்னர் அவர் சொந்த ஊருக்கு திரும்பிய, இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

;