tamilnadu

img

4 வழிச்சாலை பணிகளை உடனடியாக நிறுத்துக!

தரங்கம்பாடி, ஏப்.11-கொள்ளிடம் முதல் நாகப்பட்டினம் வரை அமையவுள்ள 4 வழிச்சாலை பணிகளை உடனடியாக நிறுத்தவில்லையெனில் மீண்டும் போராட்டத்தை நடத்துவோம் என பாதிக்கப்படும் விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.கொள்ளிடம், சட்டநாதபுரம், கோபாலசமுத்திரம், புத்தூர், எருக்கூர்,விளந்திடசமுத்திரம், தடாளன்கோவில் பகுதி, செங்கல் மேடு, திருக்கடையூர் உள்ளிட்டவை வழியாக அமைக்கப்படவுள்ள 4 வழிச்சாலைக்காக பல லட்சம்ஏக்கர் நிலங்களை அரசு, விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தி வருகிறது. ஆரம்பக் கட்டத்தில் இச்சாலைக்காக எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் அரசின் அடக்குமுறை, மிரட்டல் போக்கால் வேறுவழியின்றி தங்களது வாழ்வாதாரமாக இருக்கும் விளை நிலங்களை அரசிடம் விருப்பமின்றி ஒரு சில விவசாயிகள் ஒப்படைக்க தயாராகி வரும் சூழலில் சம்பந்தப்பட்ட துறையினரோ விவசாயிகளை மிகவும் கேவலமாக நடத்துவதாக கூறி பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தியும், அதிகாரிகள் விவசாயிகளை அலட்சியப் படுத்துவதாக கூறி வாக்காளர் அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக போராட்டக் குழுவினர் அறிவித்தனர்.இதைத்தொடர்ந்து கடந்த இருதினங்களுக்கு முன்பு வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உடனடியாக 4 வழிச்சாலை பணியை தேர்தல் முடியும் வரை நிறுத்தி வைக்க பரிந்துரைப்பதாக அளித்தஉறுதிமொழிக்கு மாறாக திருக்கடையூரில் 4 வழிச்சாலைகட்டுமானப் பணி அலுவலக கட்டிடப் பணிகள் புதனன்று தடையில்லாமல் நடைபெற்று வந் ததை அறிந்த போராட்டக் குழுவினர் கட்டிடத்தை முற்றுகையிட முயன்றதையடுத்து பொறையார் காவல்துறையினர் தலையிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து உடனடியாக அனைத்துப் பணிகளையும் நிறுத்திக் கொள்வதாக உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

;