திருச்சிராப்பள்ளி, ஜூலை 30- ஒன்றுப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி யில் பணியாற்றியவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினரும், கட்சியின் முதுபெரும் தலைவருமான சோமு (எ) மணவை எஸ்.எம்.சோமசுந்தரம் வியா ழனன்று அதிகாலை காலமானார். அன்னாரது உடலுக்கு மார்க்சி ஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலா ளர் ஜெயசீலன், மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் சிதம்பரம், கே.வி. எஸ்.இந்துராஜ், சிவராஜ், சம்பத், மாவட்டக்குழு உறுப்பினர் சம்பத், மருங்காபுரி ஒன்றியச் செயலாளர் தியாகராஜன், வையம்பட்டி ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி, தீக்கதிர் திருச்சி பதிப்பு மேலாளர் பன்னீர்செல் வம், மாநகர் மாவட்டக்குழு சார்பில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ரெங்க ராஜன், வாலிபர் சங்க புறநகர் மாவட்ட தலைவர் பாலு, ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் நவமணி மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். தோழரது மறைவிற்கு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநிலச் செயற் குழு உறுப்பினர் ஏ.லாசர், மாநிலக்குழு உறுப்பினர் கே. பாலபாரதி, மணப் பாறை வட்டச் செயலாளர் ராஜகோபால் உள்ளிட்டோர் தொலைபேசியில் இரங்கல் தெரிவித்தனர்.