தரங்கம்பாடி, ஏப்.16-நாகை மாவட்டம் பொறையார் சர்மிளா மெட்ரிக் பள்ளிஆண்டு விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி பள்ளி முதல்வர் பாண்டியராஜன் தலைமையில் நடைபெற்றது. விளையாட்டு, கலை, இலக்கியம் துறைகளில் சாதனைப்படைத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு, கேடயத்தை பொறையார் உதவி காவல் ஆய்வாளர் குமார் வழங்கினார். விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.