தரங்கம்பாடி, ஜூலை 9- நாகை மாவட்டம், பொறையார் த.பே.மா.லு கல்லூரியில் சீகன்பால்கு தரங்கம்பாடி வந்த 313-ஆவது ஆண்டு தினத்தையொட்டி கல்லூரியின் வரலாற்று துறை சார்பில் கருத்தரங்கம், கல்லூரி முதல்வர் ஜீன்ஜார்ஜ் தலைமையில் திங்களன்று நடைபெற்றது. 1620 முதல் 1845 வரை டேனிஷ்கார்களின் ஆளுமையின் கீழ் இருந்த தரங்கம்பாடியில் மிகப்பெரிய வணிகம் நடந்துள்ளது. இதில் டென்மார்க் மன்னரால் தரங்கம்பாடிக்கு வந்த ஜெர்மனி நாட்டை சேர்ந்த சீகன்பால்கு என்ற போதகரால் தமிழ் மொழி வளர்ச்சியடைந்ததை போன்று சமூக சீர்த்திருத்தங்களும் நடந்துள்ளன. பெண்கள், தாழ்த்தப்பட்ட மக்களை முன்னேற்றமடைய ஏராளமான நடவடிக்கைகளில் சீகன்பால்குவும், அவரது மனைவி டாரத்தியும் 300 ஆண்டுக்கு முன்னரே ஈடுபட்டனர். டேனிஷ்காரர்களின் வருகைக்கு பிறகு தரங்கம்பாடியில் ஏற்பட்ட சமூக மாற்றங்கள், விவசாயம், கட்டிடக்கலை, வணிகம் குறித்து நடை பெற்ற கருத்தரங்கில் அமெரிக்க நாட்டின் சிகாகோ பல்கலைக்கழக மானுடவியல் மற்றும் தொல்லியியல் பேராசிரியர் மார்க் டபிள்யூ.கௌசர் சிறப்புரையாற்றினார். வரலாற்றுத் துறைத் தலைவர் மல்லிகா புண்ணியவதி, பேராசிரி யர்கள் ஜூலியஸ் விஜயக்குமார், செல்வராஜ், அமலா தங்ககுமாரி, ஷீலா எட்வர்டு, ஜோசப் அமிர்தராஜ். வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளரு மான மரிய லாசர் ஆகியோர் கலந்து கொண்டனர். வரலாற்றுத் துறையை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.