tamilnadu

கணினி மூலம் குலுக்கல் முறையில்  வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்வு

 திருச்சிராப்பள்ளி: திருச்சி மாவட்டத்தில், 2019 ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 14 ஊராட்சி ஒன்றிய ஊரகப் பகுதிகளில் 2275 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.  முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தலில் 6 ஊராட்சி ஒன்றியங்களில் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக நடைபெறவுள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களில் 938 வாக்குச் சாவடிகளிலும், இரண்டாம் கட்டமாக நடைபெறவுள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் 1337 வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.  ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் தலைமை வாக்குப் பதிவு அலுவலர் உட்பட 7 வாக்குப் பதிவு அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். அதன் அடிப்படையில் இத்தேர்தலில் வாக்குப் பதிவு அலுவலர்களாக பணியாற்றக் கூடிய அலுவலர்களின் பெயர்ப் பட்டியலை அனைத்துத் துறை தலைமை அலுவலர்களிடமிருந்து 23387 அலுவலர்களின் பெயர்களை பெற்று கணினியில் பதிவேற்றம் செய்து இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள தேர்தல்களுக்கு தேவையான 18391 அலுவலர்களை புதனன்று மாவட்ட ஆட்சியர் சிவராசு முன்னிலையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஆர்.சங்கர், தேசிய தகவல் மைய அலுவலர் மற்றும் இப்பணிகளை கண்காணிக்க மாவட்ட ஆட்சியரால் நியமனம் செய்யப்பட்ட துணை ஆட்சியர் (பயிற்சி) எஸ். சரண்யா மேற்பார்வையில் முதல் கட்ட கணினி மூலம் குலுக்கல் முறையில் அலுவலர்களை நியமனம் செய்யும் பணி ஆட்சியர் அலு வலகத்தில் நடைபெற்றது.  இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்)எஸ். மோகன சுந்தரம், நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) து.பாஸ்கர், மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (தேர்தல்) வை.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

;