tamilnadu

img

டெல்டா ஆற்றுப் படுகையில் மணல் மாபியாக்கள் அட்டூழியம்

தஞ்சாவூர், ஜூலை 27-  டெல்டா ஆற்றுப் படுகையில் மணலை அள்ளும் மாபியாக்களை கமிஷன் வாங்கிக் கொண்டு கண்டு கொள்ளாத அதிகாரிகளால் விவசாய நிலங்கள் மணல் குவாரியாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  விஸ்வரூபம் எடுத்த கட்டுமானத் தொழி லுக்குத் தீனி போட, ஆற்றங்கரைகள் மணல் குவாரிகளாக மாற்றப்பட்டன. கோடிக்கணக் கில் வருவாய் ஈட்டித் தரும் தொழிலாக மணல் விற்பனை மாறி விட்டது. குத்தகை அடிப்படை யில் ஏலம் எடுத்து ஆறுகளில் மணல் எடுக்கும் பணி தீவிரமடைந்தது. இப்படித்தான் மணல் கொள்ளை 1990-களிலிருந்து  விஸ்வரூபம் எடுத்தது, அதன் விளைவு தான் 25 ஆண்டு களாக ஆறுகளில் மணல் கொள்ளை அதிக மாகி நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபா யத்தை எட்டியுள்ளது.  டெல்டா மாவட்டத்தின் பாசனத்தின் தேவை யை பூர்த்தி செய்வது காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணை கால்வாய் ஆறுகள் தான். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் காவிரி, வெண்ணாறு மற்றும் கொள்ளிடம் ஆற்றில் ஆரம்பத்தில் அரசு மணல் குவாரி கள் அமைத்து மணல் அள்ளியது. இது லாப மான தொழில் என அறிந்த சில அரசியல் கட்சி யினர் திருட்டுத்தனமாக மணலை கொள்ளை யடிக்க துவங்கினர். இதை கண்டு கொள்ளா மல் இருக்க சில வருவாய் துறையினர், காவல் துறையினர் கமிஷனை பெற்றுக் கொண்டு மணல் கொள்ளையை ஊக்கப்படுத்தினர். அதன் விளைவுகளால் டெல்டா மாவட்டங் களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது. ஆற்றின் தன்மை மறைந்து கரைகள் இல்லா மல் காட்சியளிக்கிறது. இந்நிலையில் மணல் மாபியாக்கள் ஆற்றை சுரண்டி விட்டு, ஆற்றுப் படுகையில் கை வைக்க துவங்கி விட்டனர். இத னால் ஆற்றை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் 15 அடி ஆழத்தில் உள்ள மணலை அள்ளி வரத் துவங்கி விட்டனர். ஆற்றுப் படுகையில் அள்ளப் படும் மணலின் தன்மை மிகவும் சிறப்பாக இருப்பதால் விலையும் அதிகளவில் விற்பனை யாகிறது. இதனால் அதிக தண்ணீர் பற்றாக் குறை அபாயம் எழுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதற்கு உதாரணமாக தஞ்சை மாவட்டம், பூதலூர் அருகே காங்கேயம்பட்டி கிரா மத்தில் வெண்ணாற்றின் ஆற்றுப் படுகையில் தனியார் விவசாய நிலத்தில் 18 அடி ஆழத்திற்கு இயந்திரங்களை கொண்டு மணலை அள்ளி விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. இதை தொடர்ந்து அக்கிராம மக்கள் மற்றும் விவசாயி கள் ஜே.சி.பி., எந்திரங்கள், லாரிகளை சிறை பிடித்து காவல்துறையினர் வசம் ஒப்படைத்த னர். ஆனால் அதிகாரிகள் கமிஷனை வாங்கிக் கொண்டு லாரியையும், ஜே.சி.பி.,யை விட்டு விட்டனர்.  இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சனிக்கிழமை அன்று மணல் அள்ளும் இடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத் திற்கு தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அய்யனாவரம் முருகேசன் தலைமை வகித்தார். மக்கள் அதிகாரம் பொரு ளாளர் காளியப்பன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பி னர் என்.வி.கண்ணன், பூதலூர் தெற்கு ஒன்றி யச் செயலாளர் சி.பாஸ்கர், வாலிபர் சங்கம் தமிழ்செல்வன், சி.பி.எம்.எல் மக்கள் விடு தலை மாவட்ட செயலாளர் அருணாச்சலம், விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், சமவெளி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பழனிராஜன், ஏ.ஐ.டி.யூ.சி., துரை.மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.வி.கண்ணன் கூறியதாவது; ஆற்றில் மணல் அள்ளி, அள்ளி வற்றி விட்டதால், தற்போது ஆற்றுப்படுகைகளை மணல் மாபியாக்கள் குறி வைத்து மணல் வேட்டையை துவங்கி விட்டனர். இதனால் ஆற்றுப் படுகையின் குடி நீர்ச் சேமிப்பு குறைகிறது. மணல் அள்ளப் பட்ட ஆற்றுத் தரையில் தேங்கும் நீர் சுத்தி கரிக்கப் படாததால் நச்சு நோய்க் கிருமிகள் அந்த நீரில் மலிந்திருக்கும். சுற்று வட்டார கிராமங்களின் நீர் ஆதாரம் ஆற்றுப்படுகை நீர்ச் சேமிப்பைச் சார்ந்தி ருப்பதால் அத்தகைய நீர் ஆதாரங்கள் வறண்டு விடும். எனவே மணல் கடத்தலில் ஈடு படும் சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும். இதே போல பனவெளி, நாகத்தி, ஆர்ச்சலூர் ஆகிய பகுதிகளில் நடக்கும் மணல் கொள்ளையை தடுக்கவும், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.