tamilnadu

img

ஆறு, குளங்களை தூர்வாரிடுக! விவசாய சங்கம் கோரிக்கை 

 திருச்சிராப்பள்ளி, ஜூலை 21- அகில இந்திய விவசாய சங்க திருச்சி மாநகர் மாவட்ட பேரவைக் கூட்டம் ஞாயிறு அன்று வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத் திற்கு மாவட்ட தலைவர் கே.சி.பாண்டி யன் தலைமை வகித்தார். வி.தொ.ச மாவட்ட தலைவர் ஏ.செல்வராஜ், பொருளாளர் இளங்கோவன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். இன் றைய விவசாயிகளின் பிரச்சனை களும், நமது கடமைகளும் என்ற தலைப்பில் மாநில துணைத்தலைவர் கே.முகமதுஅலி சிறப்புரையாற்றி னார்.  கூட்டத்தில், உய்யகொண்டான் வாய்க்கால் உள்பட அனைத்து வாய்க்கால், குளங்களை மராமத்து செய்ய வேண்டும். திருவெறும்பூர் மாரி யம்மன் கோவில் பகுதிக்கு சுடுகாட் டிற்கு உண்டான வசதிகள் முடிகண்டம் சாய்பாபா கோவில் வரை தெருவிளக்கு செய்து தர வேண்டும். செங்குறிச்சியில் குடியிருப்போருக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  புதிய தலைவராக கே.சங்கிலி முத்து, மாவட்ட செயலாளராக கே.சி. பாண்டியன், பொருளாளராக டி.தன பால், துணைத் தலைவர்களாக ஜி. சிவக்குமார், கோபாலகிருஷ்ணன், உதவி செயலாளர்களாக வி.ராமு, பி. முருகானந்தம், மாவட்டக்குழு உறுப்பி னர்களாக சி.அமல்ராஜ், எம்.சிவா, காந்தி, எஸ்.விஜயகுமார், எம்.ராதா கிருஷ்ணன், டி.கருப்பையா, ஏ.நட ராஜன், முருகையன், பாலகிருஷ்ணன், ஜி.காளிமுத்து, பிலவேந்திரன் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத் தில் நடராஜன், சுப்பிரமணி, ராமு, பிர காஷ்மூர்த்தி உள்பட 50-க்கும் மேற் பட்ட விவசாயிகள் கலந்து கொண்ட னர். தனபால் நன்றி கூறினார்.