tamilnadu

img

வேப்பத்தூர் வாய்க்கால் ஆக்கிரமிப்பு மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

கும்பகோணம், மே 22-  தஞ்சை மாவட்டம் வேப்பத்தூர் பேரூ ராட்சி கல்மேட்டு மாரியம்மன் கோவில் அருகில் மோட்டா வாய்க்காலில் இருந்து பெரிய வாய்க்காலுக்கு செல்லும் செம்போ டை கண்ணி வாய்க்கால் நீண்ட காலம் பாச னத்திற்காக வேப்பத்தூர் கிராமத்தின் வடிகா லாகவும் பயன்பட்டு வந்தது. தற்போது வாய்க்காலை தனி நபர் ஒருவர் தூர்த்து ஆக்கிரமித்து தனது சொந்த தேவைக்கு பயன்படுத்தி வருகிறார். இதனால் 25 ஏக்கர் நிலத்தை விவசாயம் செய்யும் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் வேப்பத்தூரில் மழைக் காலங்க ளில் நீர் வடிவதற்கு வழியின்றி உள்ளது. பி.கண்ணி வாய்க்கால் செல்வதற்கு அம்மன் கோவில் செல்லும் வழியில் மேல்புறம் மதில் உள்ளது. கீழ்ப்புறத்தில் உள்ள மதிலையும் சேர்த்து 300 அடிக்கு மேல் வாய்க்காலில்  மண்ணை கொட்டி சட்ட விரோதமாக ஆக்கிர மித்து உள்ளார். மேற்படி இடத்தை நேரடியாக அதி காரிகள் பார்வையிட்டு மக்கள் வாழ்வதற்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி விவசாயிகள் நலனை பாதுகாத்து மீட்டுத் தருமாறு விவ சாயிகள் சங்கம் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சா.ஜீவபாரதி, விவசாய சங்க பொறுப்பாளர்கள் ஆர்.விஸ்வநாதன், ராஜாராமன், முருகேசன் அங்குராஜ் சீனி வாசன் புருஷோத்தமன் ராஜதுரை உள்ளிட்ட விவசாயிகள் திருவிடைமருதூர் நீர்வள ஆதார துறை பொறியாளரிடம் மனு கொடுத்தனர்.

;