குளித்தலை, நவ.12- கரூர் மாவட்டம் குளித்தலை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் குளித்தலை சுங்ககேட் பகுதியில் நான்கு திசைகளிலும் உள்ளே வரும் வாகனங்களுக்கு வசதியாக வழிகாட்டும் பலகை மற்றும் தந்தை பெரியார் பாலத்தில் பழுதுகளை சரி செய்யக் கோரி குளித்தலை பகுதி இளை ஞர்கள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், குளித்தலை சுங்க கேட் பகுதியில் வாகனங்களுக்கு வழிகாட்டும் பலகை வைக்கப்படவில்லை. இதனால் ஓட்டுநர்களும் பொதுமக்களும் மிகவும் குழப்பம் அடைகின்றனர். பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலைகளில் நாள்தோறும் சென்றுகொண்டிருக்கிறது. இத னால் உடனடியாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் குளித்தலை- மணப்பாறை சாலை, முசிறி சாலை, திருச்சி, கரூர் செல்லும் சாலையிலும் அனைத்து ஊர் பெயருடன் கூடிய வழிகாட்டி பலகை வைக்க வேண்டும். மேலும் தந்தை பெரியார் பாலத்தில் கான்கிரீட் தெரியும் அளவிற்கு ரோடுகள் பெயர்ந்து உள்ளன. கம்பிகள் தெரி கிறது இதனால் பல விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள் ளது. அதை உடனடியாக சரி செய்து மக்கள் பாதுகாப்பான பயணம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.