tamilnadu

img

மக்களின் வாங்கும் சக்திக்கு ஏற்ப மின் கட்டணம் நிர்ணயம் செய்திடக் கோரிக்கை

பெரம்பலூர், செப்.14- பெரம்பலூர் துறைமங்கலத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திருச்சி மண்டலக்குழு சனிக்கிழமை நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் எஸ்.ரெங்கராஜன் தலைமை வகித்தார். முன்னதாக பெரம்பலூர் வட்ட செயலாளர் எம்.பன்னீர்செல்வம் வரவேற்றார். திருச்சி மண்டல செயலாளர் எஸ்.அகஸ்டின், மாநில துணைத்தலைவர் எஸ்.இராஜாராமன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். வட்ட பொருளாளர் கே.கண்ணன் நன்றி கூறினார். உறுப்பினர் சேர்ப்பு, மாநாட்டு பணிகள், காலநிலை பேச்சுவார்த்தை, ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டன. பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், மின்சாரம் மக்களின் அடிப்படை உரிமை என்று பிரகடனம் செய்து அதை மக்களின் வாங்கும் சக்திக்கு ஏற்ப மின் கட்டணம் நிர்ணயம் செய்திட வேண்டும். மின் துறையை பொதுத்துறையாக நீடித்து மக்களின் சேவைத் துறையாக தொடர்ந்திட வலியுறுத்தி மண்டல அளவில் மின் நுகர்வோர், தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் பங்கேற்கும் கருத்தரங்கம் நவம்பர் 23-ல் திருச்சியில் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்ற ப்பட்டன. 

;