tamilnadu

புதுக்கோட்டை மற்றும் திருச்சிராப்பள்ளி முக்கிய செய்திகள்

நூல் வெளியீட்டு விழா

பொன்னமராவதி, நவ.29- புதுக்கோட்டை பொன்ன மராவதியில் கோநாடு ஆதி திராவிடர் சமூக நல சங்கம்,  நான்குநாடு ஆதிதிராவிடர் ஐக்கிய சங்கம் ஆகிய வற்றின் சார்பில் நானிலம் மாந்த நேய இலக்கிய மாத இதழ் வெளியீட்டு விழா மருத்துவர் ஆ.அழகேசன் தலைமையில் நடை பெற்றது.  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலா ளர் சிந்தனைச் செல்வன் புத்த கத்தை வெளியிட மருத்துவர் பழ.மகாலிங்கம் பெற்றுக் கொண்டார். பி.தாமோதரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.  நான்கு நாடு தலைவர் சுப்பிரமணியன், துணைத் தலைவர் மகாலிங்கம், பொ துச்செயலாளர் கலைமணி, துணைப் பொதுச்செயலாளர் சண்முகம், பொருளாளர் கல் யாண சுந்தரம், அறங்காவலர் பூமிராஜன், ஜனசக்தி வார இதழ் பொறுப்பாளர் செங்கோடன், வழக்கறிஞர் கரு.வெள்ளைநெஞ்சன், வழக்கறிஞர் இளையராஜா, சண்முகநதி, முனைவர் வெள்ளைச்சாமி, பாலையா, தங்கமணி, கருப்பையா, பேராசிரியர் சிவனேசன், தலைமையாசிரியர் கருப்பை யா, சந்திரசேகரன், துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இதழாசிரியர் மணிமொழி ஏற்புரையாற்றினார். எழுத் தாளர் கோலாச்சி தொகுத்து வழங்கினார். ஆசிரியர் குழு முருகேசன் நன்றி கூறினார்.

பள்ளி முன்பு குளம் போல் தேங்கி கிடந்த தண்ணீர்  சிபிஎம் முயற்சியால் அகற்றம்

திருச்சிராப்பள்ளி, நவ.29-  திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் கொடியாலம் ஊராட்சி புலி வலத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 60 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் படித்து வரு கின்றனர். இந்த பள்ளியின் நுழைவு வாயிலில் மழை யின் காரணமாக சுமார் 3  அடிக்கும் மேல் குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது.  மாணவர்கள் வகுப்ப றைக்குள் செல்லும் போது தண்ணீரில் நடந்து செல்ல வேண்டி இருந்தது. இதனால் வகுப்பறைகள் நனைந்து ஈர மாவதால் மாணவர்கள் அமர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. தேங்கி நிற் கின்ற தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி  அதிகளவில் உள்ளது. தற்போது பல் வேறு இடங்களில் மர்ம காய்ச்சல் பரவி வரும் நிலை யில் சம்பந்தப்பட்ட துறை அதி காரிகள் பள்ளி மாணவர்க ளின் நலன் கருதி பள்ளி வளாகத்தின் முன்பு மழை தண்ணீர் தேங்காதவாறு நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர் வினோத்மணி கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து அந்த நல்லூர் சுகாதார துறையும், ஊராட்சி ஒன்றியம் சார்பில் வாய்க்கால் வெட்டி மழை நீரை அப்புறப்படுத்தினர். மேலும் பள்ளிக் கூடத்திற்கு முன்பு மண் கொட்டி தற்காலி கமாக மேடு செய்வதாக உறுதியளித்தார்கள்.

உரிய விலை கிடைக்கும் வரை மக்காச்சோளத்தை அரசு விற்பனைக் கூடத்தில் வைத்துக் கொள்ளலாம்

புதுக்கோட்டை, நவ.29- விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட மக்காச்சோளத்திற்கு உரிய விலை வரும் வரை வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நாள் ஒன்றுக்கு 10 பைசா செலுத்தி சேமித்து பயன் பெறலாம். இதுகுறித்து புதுக் கோட்டை மாவட்ட ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளது: மக்காச்சோளமானது கோழித் தீவனத்தில் முக்கிய பங்கு வகிக் கின்றது.   மக்காச்சோளம் முக்கிய மாநி லங்களில் படைப்புழு தாக்குதலால் முந்தைய மாதங்களில் வரத்து குறைந்து விலை உயர்ந்து காணப் பட்டது. தற்போது பருவமழையின் காரணமாக படைப்புழுவின் தாக்கம் குறைவாக உள்ளது. கர்நாடகாவிலி ருந்து மக்காச்சோளம் வரத்தொடங்கி யுள்ள நிலையில் தற்பொழுது விலை குறைந்து வருகின்றது.  எனவே, மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை ஆலங்குடி மற்றும் இலுப்பூர் ஒழுங்குமுறை விற் பனைக் கூடங்களில் வைத்து மறை முக ஏலத்தின் மூலம் விற்பனை செய்யலாம். 6 மாதம் வரை ஆலங்குடி மற்றும் இலுப்பூர் சேமிப்பு கிடங்கு களில் குவிண்டாலுக்கு நாள் ஒன்றுக்கு 10 பைசா வீதம் செலுத்தி நல்ல விலை வரும்வரை சேமித்து வைக்கலாம் என ஆலோசனை வழங்கப்படுகின்றது. மேலும், தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின்கீழ் இயங்கி வரும் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம் கடந்த 19 ஆண்டுகளாக உடுமலைப் பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலவிய மக்காச்சோளம் விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.  ஆய்வுகளின் அடிப்படையில் தர மான மக்காச்சோளத்தின் பண்ணை விலை அறுவடையின் போது படைப்புழு தாக்கம் தமிழ்நாட்டில் இல்லையெனில் (நவம்பர்-19 - ஜனவரி-20) குவிண்டாலுக்கு ரூ.1800 முதல் ரூ.2000 ஆக இருக்கும்.  மக்காச்சோளம் விற்பனை குறித்த மேலும் தகவல்களை பெற கே. இராஜேந்திரன், கண்காணிப்பாளர், ஆலங்குடி ஒழுங்குமுறை விற் பனைக் கூடம் 97868-65918 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.