tamilnadu

img

பொதுத்துறை இன்சூரன்ஸ் பங்குகள் விற்பனையை கைவிடுக!

திருச்சிராப்பள்ளி, ஜூன் 12- திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் 4.60 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திருநாவுக்கரசரை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தி னர்  செவ்வாயன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் திருநாவுக்கரசர் எம்பி யிடம், எல்.ஐ.சி.யில் பாலிசிதாரர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிற 18 சதவீத ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும். பொதுத்துறை இன்சூரன்ஸ் (எல்.ஐ.சி மற்றும் ஜி.ஐ.சி) பங்குகள் விற்பனை யை கைவிட வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி அகில இந்திய இன் சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் தஞ்சை கோட்ட பொது செயலாளர் செல்வராஜ், இணை செயலர் பன்னீர் செல்வம், துணை தலைவர்கள் கண் ணம்மா, ஜோன்ஸ் மற்றும் புதுக் கோட்டை சிங்கமுத்து, லதாராணி ஆகி யோர் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அவர் கோரிக்கைகளை உடனடியாக பரி சீலிப்பதாக கூறினார். இதனை தொடர்ந்து இந்தியா முழுவதிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நாடாளு மன்ற உறுப்பினர்களை சந்தித்து மனு அளிக்கும் இயக்கம் நடைபெற உள் ளது.