tamilnadu

img

மாணவர்களுக்கு நிவாரணம் வழங்கல்

தரங்கம்பாடி, மே 29- செம்பனார்கோவில் ஒன்றியம், உமை யாள்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்களின் குடும்பங்களுக்கும், அங்கு பணிபுரியும் துப்புரவு தொழிலா ளர்களுக்கும் தலைமையாசிரியர் சுமதி, உதவியாசிரியர் கேசவள்ளி ஆகியோர் கொரோனா நிவாரணமாக ரூ 500 மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினர்.  வட்டார கல்வி அலுவலர் சீனிவாசன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுப்பிர மணியன் ஆகியோர் கொரோனா விழிப்பு ணர்வு கருத்துக்களை கூறி நிவாரண பொ ருட்களை வழங்கினர். ஊராட்சி தலைவர் ஜோதி வள்ளி, துணைத் தலைவர் சரவணன், சுகாதார அதிகாரி தவபாலன், ஆசிரியர் மதிவாணன் ஆகியோர் உடனிருந்தனர்.