tamilnadu

img

பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜன.21 வரை வழங்கப்படும் : அமைச்சர் தகவல்

தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தினை தொடங்கி வைத்த அமைச்சர் இரா. துரைக்கண்ணு துவக்கி வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவித்து, வெளிக் கொணரவும் தமிழ்நாட்டில் உள்ள 12,524 கிராம ஊராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் இளைஞர் விளையாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.  அதற்கான நிதியாக ரூ.76 கோடியே 23 லட்சத்து 9 ஆயிரத்து 300- ஒதுக்கீடு செய்யப் பட்டு உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 589 கிராம ஊராட்சிகள் மற்றும் 22 பேரூராட்சி களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். முதற்கட்டமாக தஞ்சாவூர் ஒன்றியத்தில் நாஞ்சிக் கோட்டை, கொ.வல்லுண்டான்பட்டு, ஒரத்தநாடு ஒன்றியத்தில் தெலுங்கன்குடிகாடு மற்றும் பாபநாசம் பேரூராட்சியில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.              இளைஞர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களான கிரிக்கெட் உபகர ணங்கள், வாலிபால் உபகரணங்கள், திறந்தவெளி உடற்பயிற்சிக்கு தேவையான உபகர ணங்கள், இதை தவிர விளையாட்டிற்கு தேவையான ஆடுகளங்கள் உள்ளாட்சித்துறை மூலம் மேம்படுத்தப்பட்டு வழங்கப்படவுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு வரும் 21 ஆம் தேதி வரை தகுதியுடைய அனைவரும் விடுபடாமல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.   ஆட்சியர் ம.கோவிந்தராவ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் கு. பரசுராமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இராமகிருட்டிணன், மாவட்ட விளையாட்டு அலு வலர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

;