மயிலாடுதுறை, செப்.20- அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த மாநில, மாவட்ட அளவிலான கவிதை ஒப்புவித்தல் போட்டியில் ஏ.வி.சி கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். முரசொலி அறக்கட்டளை சார்பில் மாநில அளவிலான பாவேந்தர் பாரதிதாசன் கவிதை ஒப்புவித்தல் போட்டி கடந்த 7 ஆம் தேதி திருவண்ணாமலையில் நடைபெற்றது இதில் ஏ.வி.சி.கல்லூரி சார்பில் பி.எஸ்.சி கணிதம் இரண்டாமாண்டு பயிலும் மாணவர் ம.க.சூர்யா நான்காம் இடமும், இதே போன்று கடந்த மாதம் 24 ஆம் தேதி அன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற மாவட்ட அளவில் நடந்த போட்டியில் முதலிடமும் பெற்றார். மேலும் இதில் பி.ஏ முதலாமாண்டு ஆங்கிலம் பயிலும் மாணவி ர. பிரியதர்ஷினி இரண்டாம் இடமும் எம்.ஏ தமிழ் இறுதியாண்டு மாணவர் வி.பால் ஏங்கல்ஸ் ஆறுதல் பரிசும் பெற்றனர். மாநில மற்றும் மாவட்ட அளவில் பரிசு பெற்று வந்த மாணவர்களை கல்லூரி ஆட்சி மன்ற குழு தலைவர் என்.விஜயரெங்கன், செயலர் கே.கார்த்திகேயன், பொருளாளர் என். ஞானசுந்தர், முதல்வர் முனைவர் இரா.நாகராஜன், தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு.தமிழ்வேலு ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர்கள் ம.மோ.கீதா, முனைவர் செ.செந்தில்பிரகாஷ் பாராட்டினர்.