தஞ்சாவூர் ஆக.26- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்த ஒட்டங்காடு ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, கிராமத்தைச் சேர்ந்த அஞ்சம்மாள் தலைமை வகித்தார். பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலர் கோ.செல்வம், ஒட்டங்காட்டைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான எம்.சிவகுரு பிரபாகரன், மதன்பட்டவூர் கிராமத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான ஆர்.சத்தியசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், “ஒட்டங்காடு பஞ்சாயத்துக்கு ட்பட்ட பெரியகுளம் மற்றும் இதர குள ங்களின் ஆக்கிரமிப்பு அகற்றுவது, தண்ணீர் வரத்து வாய்க்கால்களை சரி செ ய்வது உள்ளிட்டவை குறித்து மக்களிடம் மனு க்கள் பெறப்பட்டு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. கிராம நிர்வாக அலுவலர் பரிமளா, அரசு நர்சிங் கல்லூரி தாளாளர் சிவ.நாடிமுத்து, மதன்பட்டவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் டி.கலைச்செல்வி, கலைமகள் பள்ளித் தாளாளர் ஆற்றல் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலர் கோ.செல்வம், நீர்நிலை பாதுகாப்பு குறித்த உறுதிமொழியை வாசிக்க, பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து பட்டுக்கோட்டை அரசு நர்சிங் கல்லூரி மாணவிகள், மதன்பட்டவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளின் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பின்னர் ஒட்டங்காடு பெரிய ஏரியின் கரைகளை பலப்படுத்தும் விதமாக மரக்கன்றுகள், 5 ஆயிரம் வெட்டிவேர் செடிகள் ஆகியவற்றை ஐஏஎஸ் அலுவலர் எம்.சிவகுரு பிரபாகரன்(திருநெல்வேலி பயிற்சி துணை ஆட்சியர்), ஐபிஎஸ் அலுவலர் ஆர்.சத்தியசுந்தரம்(மிஜோரம்) ஆகியோர் முன்னிலையில் பெரியகுளம் ஏரிக்கரையில் நடவு செய்தனர்.