திருவண்ணாமலை, ஜூன் 30- மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழி லாளர்களை, நிரந்தரம் செய்ய வேண்டும் என சிஐடியு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) திருவண்ணாமலை மாவட்ட 8 ஆவது மாநாடு திரு வண்ணாமலையில் நடை பெற்றது. ஜி.சேகர் நினைவரங்க த்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு மாவட்டத் தலை வர் சி.அப்பாசாமி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் பெ.கண்ணன் கொடி ஏற்றி னார். மாவட்ட துணைச் செய லாளர் ஏ.சேகர் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். வரவேற்புக்குழு தலைவர் வழக்கறிஞர் எஸ்.அபிரா மன் வரவேற்றார். மாநிலச் செயலாளர் இ.முத்துக்குமார் துவக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் இரா.பாரி வேலை அறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் எஸ்.தண்டபாணி நிதி நிலை அறிக்கையினை வாசித்தார். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.சுப்பிரமணி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.பிரகலநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அங்கன்வாடி சங்க மாநிலச் செயலாளர் டி.டெய்சி நிறை வுரையாற்றினார். ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் கே.சரவணன் நான்றி கூறினார். அங்கன்வாடி ஊழியர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஆரணியில் புதிதாக மின் பகிர்மான வட்டம் துவக்க வேண்டும், டாஸ்மாக் ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், நடைபாதை வியாபாரிகளை தொடர்ந்து வியாபாரம் செய்திட அனு மதிக்க வேண்டும், அரசுப் பேருந்துகளில் கட்டண உயர்வை கைவிட வேண்டும், டெல்டா பகுதி யில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும், மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை கைவிடவேண்டும், 8 வழிச் சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.