tamilnadu

img

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கூத்தூர் பிடிஓ அலுவலகம் முற்றுகை

திருச்சிராப்பள்ளி, ஜூலை 8- திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் கூத்தூர் பஞ்சாயத்திற்குட்பட்ட பனமங்கலம் அரசு பள்ளியில் குடிநீர் இல்லாமல் மாணவர்கள் அவதிப்படுவதை போக்க உடனடியாக குடிநீர் வசதி செய்து தர வேண்டும். 100 நாள் திட்டத்தில் வேலை செய்யாதவர்கள் பெயரில் பணம் எடுத்து மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  வாத்தலை வாய்க்காலை தூர்வார வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை குறித்து முன்பு போடப்பட்ட ஒப்பந்தத்தை நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியக்குழு சார்பில் வரும் 11-ம் தேதி கூத்தூர் பிடிஓ அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.  இதுகுறித்த தெருமுனை பிரச்சாரம் பனமங்கலம், பழூர் கிளை சார்பில் ஞாயிறு அன்று அப்பகுதிகளில் நடை பெற்றது. பிரச்சாரத்திற்கு பனமங்கலம் கிளை செயலா ளர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.வி.எஸ் இந்துராஜ், சுப்ரமணியன், ஒன்றிய செயலாளர் கனகராஜ் ஆகியோர் பேசினர். கோவிந்தராஜ், சக்திவேல், ராஜேந்திரன், சிவா, வரதன், முருகன், கேசவன், ரவி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.