தஞ்சாவூர், மே 29-பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் இந்திய இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக் கழகம் சார்பில் நடைபெற்ற, அகில இந்திய அளவிலான 2-வது சாம்பியன்ஷிப்பாட்மிண்டன் போட்டியில் பங்கேற்று விளையாடிய பட்டுக்கோட்டை - சுக்கிரன்பட்டி பிருந்தாவன் மேல்நிலைப் பள்ளியின் 12-ம் வகுப்பு மாணவர் எஸ்.எம்.டயன்டோனிரிட்ஸ் ஒற்றையர் பிரிவில் 2-ம் இடம் பெற்றார். மேலும் இரட்டையர் பிரிவில் 3-ம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.இதையொட்டி பள்ளியில் செவ்வாய்க்கிழமை மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் டி.சுவாமிநாதன், செயலாளர் ஜெ.சரவணன் ஆகியோர் மாணவரைப் பாராட்டி பொன்னாடை அணிவித்தனர். நிகழ்ச்சியில் பள்ளி இயக்குநர்கள் எம்.ராமையா, சி.கோபாலகிருஷ்ணன், எம்.ரெத்தினகுமார், எஸ்.ராஜமாணிக்கம், சி.மோகன், டாக்டர் கவுசல்யா ராமகிருஷ்ணன், கே.கண்ணன், கே.பிரசன்னா, தலைமையாசிரியர் ஏ.முகமது அக்பர் அலி, உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.