tamilnadu

மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை முக்கிய செய்திகள்

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு 

மயிலாடுதுறை, பிப்.14- மயிலாடுதுறை அருகே உள்ள ஏவிசி கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் மற்றும் அரசு பொது சுகாதாரம் நோய்த் தடுப்பு மருந்து இயக்ககம் ஆகியவை இணைந்து கொரோனா வைரஸ் தடுப்புக் கான நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு கல்லூரி யின் செயலர் கி. கார்த்திகே யன் தலைமை வகித்தார். முதல்வர் டாக்டர் ஆர். நாக ராஜன் முன்னிலை வகித்தார். மருத்துவர் சரத்சந்தர், கொரோனா வைரஸ் உரு வான முறை மற்றும் அதை தடுணப்பதற்கான செயல் டுறை பற்றி பேசினார். இதற் கான ஏற்பாடுகளை செஞ் சுருள் சங்க ஒருங்கிணைப் பாளர் வி.கோகுலகிருஷ் ணன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

இன்று மின்தடை  

பொன்னமராவதி, பிப்.14- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் பிப்.15 ஆம் தேதி காலை 9 முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இதில் வலையபட்டி, கொப்பனாப்பட்டி, செம்பூதி, கொன் னைப்பட்டி, சுந்தரம், கோவணூர், செவலூர், மேலமேலநிலை, வேகுப் பட்டி, குழிபிறை, ஏனாதி, பிடாரம் பட்டி, வேந்தன்பட்டி, தொட்டியம் பட்டி, ஆலவயல், கண்டியாநத்தம், கல்லம்பட்டி, நகரப்பட்டி, அம்மன் குறிச்சி, தூத்தூர், மைலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோ கம் இருக்காது என மின் உதவி செயற் பொறியாளர் முருகன் தெரிவித்துள் ளார்.

 

நாட்டு வெடி குண்டு வீச்சு: விசாரணை  

தஞ்சாவூர், பிப்.14-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே தென்னங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (50) திமுக பிரமுகர், இவரது வீட்டின் பின்புறம் வியாழக்கிழமை இரவு சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் பார்த்த போது நாட்டு வெடிகுண்டு வெடித்த சிதறல்கள் கிடந் துள்ளன. மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசி சென்றது தெரிய வந்தது. அண்மையில் நடைபெற்ற பேராவூரணி ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பேரா வூரணி காவல்துறையினர் விசாரணை செய்து வரு கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 13,15,498 வாக்காளர்கள்

புதுக்கோட்டை, பிப்.14- 2020-க்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.உமாமகேஸ்வரி அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெள்ளிக்கிழமை வெளியிட்டார். அப்போது ஆட்சியர் தெரிவித்ததாவது. புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை சுருக்கத் திருத்தம் 2020-க்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 6,51,682 ஆண் வாக்காளர்களும், 6,63,731 பெண் வாக்காளர்களும்,  85 மூன்றாம் பாலினத்தவர்களும்  என மொத்தம் 13,15,498 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.  2020-ஆம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியலில் 23.12.2019-ன்படி மொத்தம் 12,78,598 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். 23.12.2019 முதல் 22.01.2020 வரை நடைபெற்ற 2020 ஆம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தின் போது 17,118 ஆண் வாக்காளர்கள்,  20,316 பெண் வாக்காளர்கள் மற்றும் 37 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்த்து மொத்தம் 37,471 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 23.12.2019 முதல் 22.01.2020 வரை நடைபெற்ற 2020 ஆம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தின் போது 260 ஆண் வாக்காளர்கள்,  311 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 571 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் 1,537 வாக்குசாவடி மையங்கள் உள்ளன. 23.12.2019     முதல் 22.01.2020 வரை நடைபெற்ற 2020 ஆம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தின் போது புதுக்கோட்டை மாவட்டத்தில் 18 வயதுடைய இளம் வாக்காளர்களில் 5,239 ஆண் வாக்காளர்கள், 4,123 பெண் வாக்காளர்கள் மற்றும் 5 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்த்து மொத்தம் 9,367 வாக்காளர்கள் பட்டியலில்  சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.  இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், வருவாய் கோட்டாட்சியர்கள் தண்டாயுதபாணி, டெய்சிக்குமார், குணசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பிப்.17-ல் இடதுசாரி கட்சிகள் சார்பில் மக்கள் விரோத மத்திய பட்ஜெட் எதிர்ப்பு பிரச்சார தெருமுனைக் கூட்டம்

கரூர், பிப்.14-  மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி, சிபிஜ(எம்.எல்) விடுதலை கட்சிகளின் சார்பில் இடதுசாரி கட்சிகளின்  ஆலோசனைக் குழு கூட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி தலைமை வகித்தார். கரூர் நகர செயலாளர் எம். ஜோதிபாசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரத்தி னம், மாவட்டத் துணைச் செயலாளர் சண்முகம், மாவட்டக் குழு உறுப்பி னர் தங்கவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து  பிப்ரவரி  12 முதல் 18 வரை நாடு தழுவிய அளவில் கண்டன இயக்கம் நடை பெறுகிறது. அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் 17-ஆம் தேதி மாலை 5 மணிக்கு குளித்தலை, பள்ள பட்டி பேருந்து நிலையம் முன்பும்,18ல் மாலை 5 மணிக்கு கரூர் நகரத்திற் குட்பட்ட வெங்கமேடு அண்ணா சிலை முன்பும் பட்ஜெட் எதிர்ப்பு பிரச்சார தெருமுனை கூட்டம் நடைபெறு கிறது. கூட்டத்தில் பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்க வைப்பது என தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.

;