திருச்சிராப்பள்ளி, மே 27- கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப் பிக்கப்பட்டுள்ளது. இதனால் கூலி தொழிலாளர்கள் வேலையின்றி அவதிப்படுகின்றனர். மேலும் பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலை யில் காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் திருச்சி கிளை 1 சார்பில் அரிசி, பருப்பு உள்ளிட்ட 13 வகையான மளிகை பொருட்கள் கொண்ட ரூ.1500 மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் சிகை அலங்கார தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டு நர், பெயிண்டிங்தொழிலாளர்க ளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கிளை மேலா ளர் கணபதிசுப்ரமணியம், சங்க இணைசெயலாளர் பன்னீர்செல் வம், துணைத்தலைவர் ஜோன்ஸ், பழனியாண்டி, கிளைத்தலைவர் புகழேந்தி, செயலாளர் செல்வ குமார் ஆகியோர் தொழிலாளர்க ளுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்.