தருமபுரி, பிப். 4- எல்ஐசியின் பங்குகளை தனியா ருக்கு விற்பனை செய்வது என்ற மத்திய அரசின் முடிவை கண்டித்து தருமபுரி மற்றும் சேலத்தில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மத்திய அரசு கடந்த 1969 ஆம் ஆண்டு வழங்கிய ரூ.5 கோடி முத லீட்டுடன் எல்ஐசி துவங்கப்பட்டது. கடந்த 63 ஆண்டு காலம் பிரம்மாண்ட வளர்ச்சியடைந்து தற்போதுரூ. 31 லட்சம் கோடி சொத்து மதிப்பு கொண்ட தாக பரிணமித்துள்ளது. இந்த சீர்மிகு நிறுவனத்தை பலவீனப்படுத்தும் வகையில் மத்திய அரசு பட்ஜெட் டில் தன்பங்கை விலகிக்கொள் ளும் என்று அறிவித்துள்ளது. இந்த நட வடிக்கை எல்ஐசியை சீர்குலைக் கும் நடவடிக்கையாகும். தனியார் மையத்துக்கு கொண்டு செல்ல முயற் சிக்கிறது. எனவே, இந்த நடவடிக் கையை கண்டித்து செவ்வாயன்று நாடு முழுவதும் எல்ஐசி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்தப் போராட் டத்தில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், எல்ஐசி முதல் நிலை அதிகாரிகள் சங்கம், எல்ஐசி வளர்ச்சி அதிகாரிகள் சங்கம், எஸ்சி & எஸ்டி ஊழியர் நலச் சங்கம் உள்ளிட்ட சங்கத் தினர் கலந்து கொண்டனர். தருமபுரி எல்ஐசி கிளை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு கிளைத் தலைவர் சந்திரமெளலி தலைமை வகித்தார். கோட்ட இணை செயலாளர் ஏ.மாதேஸ்வரன்,கிளைச் செயலாளர் மகேந்திரன், முதல்நிலை அதிகாரிகள் சங்க நிர்வாகி சதீஷ் பிரபு, வளர்ச்சி அதிகாரிகள் சங்க நிர்வாகி குமரேசன், முகவர்கள் சங்க தலைவர்கள் ரமேஷ்குமார், மரியாலூ யிஸ் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
சேலம்
எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்கக் கூடாது என வலியுறுத்தி சேலத் தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எல்ஐசி ஊழியர்கள் ஒரு மணி நேரம் அலுவலக பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக சேலம் காந்தி ரோடு பகுதியில் அமைந்துள்ள எல்ஐசி கோட்ட அலுவலகத்தில் 300க் கும் மேற்பட்ட பணியாளர்கள் அலுவ லகப் பணிகளை புறக்கணித்து ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு, காப்பீட் டுக் கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆர். நரசிம்மன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ஆர் தர்மலிங்கம் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இதில், முதல் நிலை அதிகாரிகள், சங்க செயலாளர் ஜி.ஏ.வெங்கடேசன், வளர்ச்சி அதிகாரிகள், சம்மேளனம் செயலாளர் எஸ் வேங்கட சுப்பிரம ணியம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதேபோல், சேலம் மாவட்டம், சங்ககிரியில் எல்.ஐ.சி ஊழியர்கள் ஒரு மணிநேரம் வேலைநிறுத்தம் செய்து சங்ககிரி எல்.ஐ.சி கிளை அலுவ லகம் முன்பு எல்.ஐ.சி- யின் பங்குகளை மத்திய அரசு விற் பனை செய்யும் முடிவை கண்டித்து கண் டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இதில்,காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க தலைவர் குமரேசன், செயலாளர் பிரதீப், முதல்நிலை அதிகாரிகள் சங்கத் தலைவர் கல்யாணசுந்தரம், வளர்ச்சி அதிகாரிகள் சங்க செயலாளர் கபிலன், முகவர்கள் சங்க செயலாளர் நிதிமோ கன், சிஐடியு சங்க நிர்வாகி சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மத் திய அரசின் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பி னர்.