வேலைநேரத்தை 12 மணியாக அதிகரிப்பதா?
சென்னை, மே 14- கொரோனா தொற்றை காரணம் காட்டி வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணிநேரமாக மாற்ற முயற்சிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து சிஐடியு சார்பில் மே 14 வியாழனன்று மாநிலம் தழு விய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களுக்கு மருத்துவம் பார்ப்பது, வீடுவீடாகச் சென்று பாதி ப்பை கண்டறிவது, தூய்மைப் பணி களில் ஈடுபடுவது போன்ற கொரோனா ஒழிப்பு மற்றும் தடுப்பு பணிகளில் அர்ப்பணிப்பு உணர்வு டன் பணியாற்றி வரும் மருத்துவர் கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், ஐசிடிஎஸ், ஆஷா தொழிலாளர்கள், உள்ளாட்சி துறை ஊழியர்கள், தூய்மை தொழிலாளர் கள் ஆகியோர் இரவு பகல் பாராமல் 24 மணிநேரமும் ஓய்வு உறக்க மின்றி பணியாற்றி வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கின் போது மின்சாரம், குடிநீர், ரேசன் கடைகள், காவல்துறையினர், பஞ்சாயத்து அலுவலகப் பணியாளர்கள், ஓட்டு நர்கள் என பல்வேறு துறைகளைச் சார்ந்த லட்சக்கணக்கான ஊழியர் களும், தொழிலாளர்களும் பொது மக்களின் அத்தியாவசியத் தேவை களை பூர்த்திசெய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கினால் ஏற் பட்டுள்ள பொருளாதார பாதிப்பை காரணம் காட்டி வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக மாற்றவும் தொழிலாளர் சட்டங்களை மூன்றாண்டுகளுக்கு செல்லாத தாக செய்யவும் தொழிற்சங்க நட வடிக்கைகளை முடக்கவுமான நட வடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள் ளன.
கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள தொழிலாளர்கள் மீதான ஆளும் வர்க்கத்தின் தாக்குதலை கண்டி த்தும் கொரோனா ஒழிப்பு மற்றும் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து பிரிவினருக்கும் நன்றி யும், பாராட்டும் தெரிவிக்கும் வகை யிலும், வருமான வரி செலுத்தாத அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதம் 7,500 ரூபாய் வீதம் 3 மாதங் களுக்கு வழங்க வேண்டும். கொரோனா தொற்று தடுப்பு நட வடிக்கையில் ஈடுபட்டுள்ள மருத்து வர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு தேவையான தரமான உபகரணங்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் மாநிலம் முழுவதும் சங்க அலுவலகங்கள், தொழிலா ளர் வசிக்கும் தெருக்கள், ஆலை வாயில்கள் முன்பு மே 14 வியாழ னன்று காலை 10 மணி முதல் 10.15 வரை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஆலைத் தொழிலா ளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஆஷா தொழிலாளர்கள், மீன்பிடித் தொழிலாளர்கள், பீடித் தொழி லாளர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேள னம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். சென்னை அம்பத்தூர் தொழிற் பேட்டை பணிமனையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செய லாளர் கே.ஆறுமுகநயினார், பொரு ளாளர் சசிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். டி.ஆர்.இ.யு. சார்பில் சென்னையில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் அலுவலகம் முன்பு செயல் தலைவர் ஜானகி ராமன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மாநிலம் முழு வதும் 200-க்கும் மேற்பட்ட இடங் களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அலுவலகம் முன்பு மாநிலத் தலைவர் ஜெய்சங்கர் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கோவையில் பொதுச்செய லாளர் ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஐசிஎப் யுனைட்டெட் ஒர்க்கர்ஸ் யூனி யன் (சிஐடியு) சார்பில் சென்னை யில் உள்ள ரயில்பெட்டி உற்பத்தி தொழிற்சாலை முன்பு தலைவர் எஸ்.ராமலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் செயல் தலைவர் கிருஷ்ணகுமார், பொதுச் செயலாளர் ப.ராஜாராமன், பொருளாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.