tamilnadu

img

7 பேரை விடுதலை கோரி ஆளுநருக்கு கடிதம்

கும்பகோணம், மே 21-முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில்தமிழக ஆளுநருக்கு கடிதம் எழுதும் போராட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் தபால் நிலையம் முன்பு நடைபெற்றது.போராட்டத்திற்கு கும்பகோணம் நகரச் செயலாளர் ரஞ்சித் குமார் தலைமை வகித்தார். நகரத் தலைவர் தமிழரசி, துணைத் தலைவர் சரத்ராஜ், கார்த்திக் ஒன்றியச் செயலாளர் ராமன்ஒன்றியத் தலைவர் தமிழினியன் உள்ளிட்ட வாலிபர்கள் தமிழக ஆளுநருக்குகடிதத்தை அஞ்சல் வழியாக அனுப்பினர். 

தஞ்சாவூர் 

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக் கோட்டையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்திற்கு இந்தியஜனநாயக வாலிபர் சங்க ஒன்றியத்தலைவர் மோரிஸ் அண்ணாதுரை தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஆம்பல் துரை.ஏசுராஜா அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தை தொடங்கி வைத்தார். நிர்வாகிகள் முருக.சரவணன், ஆர்.சுதாகர், ராஜதுரை, திங்கள்கண்ணன், வீரஸ்ரீ உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையத்தில், விடுதலை செய்யக்கோரும் வாசகங்கள் அடங்கிய நூற்றுக்கணக் கான அஞ்சல் அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன.


;