tamilnadu

பாட்டீலில் அடைக்கப்பட்ட இளநீர் காளிமார்க் குழுமம் அறிமுகம்

சென்னை, மே 8-தமிழகத்தில் 103 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட பிரபல குளிர்பான நிறுவனமான காளிமார்க், கோடையை ஒட்டி, மென்பானங்கள், பழரசங்கள், இளநீர், மினரல் வாட்டர், சோள ரவை, சோள மாவு உள்ளிட்ட 30 வகையான புதிய பொருட்களை அறிமுகம் செய்துள்ளது. திரைப்பட நடிகைகள் நிக்கி கல்ராணி, அக்ஷரா ஹாசன், சமையல் கலை நிபுணர் முனைவர் தாமு உள்ளிட்ட பிரபலங்கள் இவற்றை அறிமுகம் செய்தனர். காளிமார்க் குழும நிறுவனங்கள் ஏற்கனவே ‘பொவண்டோ’ மற்றும் ‘விப்ரோ’ ஆகிய பிராண்ட் பெயர்களில் முன்னணி மென்பானங்களை விற்பனை செய்து வருகின்றன. தற்போது புதிய பிராண்டாக ‘ஜிப்ஸி’ என்ற பெயரில் சில உணவுப் பொருட்கள் மற்றும் பழரசங்கள், ‘இளநீர் என்ற பெயரில் சில இயற்கை பானங்களை அறிமுகம் செய்துள்ளது. இவை அனைத்தும் 180 மில்லி அளவுகளில் கிடைக்கும். “இளநீர் உள்பட எல்லாப் பொருட்களும் 100 சதவீதம் இயற்கையான பொருட்கள். அவற்றை நீண்டநாள் கெடாமல் பாதுகாக்கச் சேர்க்கப்படும் ரசாயனப் பொருட்களோ, பானத்தின் நிறத்தை மாற்றிட உதவும் நிறமிகளோ இன்றி, இவை பேக் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக காளிமார்க் நிறுவனத்தின் குழுமத்தின் இணை மேலாண் இயக்குனர் ஜே. ரமேஷ் கூறினார்.உடலுக்கு நலம் பயக்கும் புதுவகை பானங்களை, குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளளோம் என்று காளிமார்க் குழுமத்தின் தலைவர் கே.பி.ஆர். தனுஷ்கோடி கூறினார். பழரசங்கள் மா, பைனாப்பிள், கொய்யா மற்றும் லிச்சி என எதுவானாலும், அவை உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றவை…, சுவையில் மிஞ்சியவை என்றும் தரத்தில் குறைவில்லாதவை என்றும் அவர் மேலும் கூறினார்.

;