tamilnadu

img

அரசு ஊழியர் சங்க அமைப்பு தினக் கொடியேற்றம்

நாகப்பட்டினம், மே 6-1984, மே மாதம் 6 அன்று துவக்கப்பட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 36-வது அமைப்பு தினக் கொடியேற்ற நிகழ்ச்சி, திங்கட்கிழமை காலை, நாகப்பட்டினம் அரசு ஊழியர் சங்கக் கட்டிடம் முன்பு நடைபெற்றது. அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.டி.அன்பழகன் தலைமைவகித்து உரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கக்கொடியை, சங்கத்தின் மாவட்டத் தலைவர் ப.அந்துவன்சேரல் ஏற்றி வைத்தார். அனைத்து இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனக் கொடியை அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலத் துணைத்தலைவர் சு.சிவகுமார் ஏற்றி வைத்து பேசினார்.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் மாநிலச் செயலாளர் வி.பாலசுப்பிரமணியன், அரசு ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் பா.ராணி, வட்டத் தலைவர் சி.பாலசுப்பிரமணியன், வட்டப் பொருளாளர் எம்.மேகநாதன், வருவாய்த்துறை அலுவலர் சங்கமாவட்டச் செயலாளர் து.இளவரசன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.ராஜூ, ஓய்வூதியர் சங்கமாவட்டச் செயலாளர் சொ.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் பி.ஆசைத்தம்பி, வட்டச் செயலாளர் எம்.பி.குணசேகரன், நாகை தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சு.மணி, தொலைத்தொடர்பு ஊழியர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் எம்.குருசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். வட்டச் செயலாளர் எம்.தமிழ்வாணன் நன்றி கூறினார்.