பெரம்பலூர், ஜூலை 7- பெரம்பலூர் லட்சுமி டெஸ்ட்டியூப் பேபி சென்டர் மற்றும் லட்சுமி மருத்துவமனை இணைந்து குழந்தையின்மைக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு நிர்வாக இயக்குநர் டாக்டர் சி.கருணாகரன் தலைமை வகித்தார். முகாமில், மகப்பேறு மற்றும் குழந்தையின்மைக்கான சிறப்பு மருத்துவ நிபுணர் ஜெயலட்சுமி சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினார். மேலும் முகாமில், குழந்தையில்லா தம்பதிகளுக்கான கரு முட்டை குழாய் அடைப்பு உள்ளவர்கள், தொடர் கருச்சிதைவு உள்ளவர்கள், ஐ.யூ.ஐ., ஐ.வி.எப்., செய்து தோல்வி அடைந்தவர்கள், விந்தணு குறைபாடு உள்ளவர்கள், ஆண், பெண்களுக்கான பாலியல் பிரச்சனைகள் உள்ளவர்கள் உள்பட கலந்து கொண்டவர்களுக்கு சிறப்பு ஆலோசனைகளும் ஸ்கேன், விந்து பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டது. மேலும் கருத்தரித்தல் தொடர்பான அனைத்து பிரச்சனைக்கும் அதிநவீன மருத்துவ தொழில்நுட்பத்தில் சிறப்பான சிகிச்சை வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. முகாமில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.