தரங்கம்பாடி ஜூன் 15- நாகை மாவட்டம் திருக்கடையூரில் அபிராமி லயன்ஸ் சங்கமும், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமணையும் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாமில் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெற்று பயனடைந்தனர். கண் நோய் குறித்து அனைத்த குறைபாடுகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்கள் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். லயன்ஸ் சங்க நிர்வாகிகள் கேசவன், என்.ஜி.கே, வெங்கடேசன், ஹரிகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.