tamilnadu

img

மல்லிபட்டினம் துறைமுகம் புதுப்பிப்பு எம்எல்ஏ-வுக்கு மீனவர்கள் நன்றி

தஞ்சாவூர், ஜூன் 26- துறைமுகத்தை புதுப்பித்துத் தர வேண்டும் என்ற தங்களது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றித் தந்த சட்டமன்ற உறுப்பினருக்கு மீனவர்கள் நன்றி தெரிவித்தனர்.  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினராக இருப்ப வர் மா.கோவிந்தராசு. இவர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் போது, மல்லிப்பட்டினம் பகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டி ருந்தார். அப்போது அங்குள்ள மீனவர்கள் மற்றும் மீனவர் சங்க நிர்வாகிகள், ‘பழுதடைந்த நிலையில் உள்ள, மல்லிப்பட்டினம் துறை முகத்தை சீரமைத்து தரவேண்டும். கடற்கரையை தூர்வாரி, படகுகள் வந்து செல்ல ஏதுவாக ஆழப்படுத்தி தரவேண்டும்’ எனக் கோரிக்கை விடுத்து மனு அளித்தனர்.  தான் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால், அதனை நிறைவேற்றித் தருவதாகவும் மா.கோவிந்தராசு உறுதி அளித்தார்.

இந்நிலையில் மா.கோவிந்தராசு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து எம்எல்ஏ மா.கோவிந்தராசு, அப்போ தைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோரைச் சந்தித்து கோரிக்கை விடுத்தார். மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் முன்முயற்சியில் ரூ.60 கோடியை துறைமுகம் மறுசீரமைப்பு மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்திற்கென தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது.  தற்போது மல்லிப்பட்டினம் துறைமுகம் 950 மீட்டரில் 2 படகு அணை யும் துறை, படகு பழுது பார்க்கும் தளம், நிர்வாக அலுவலக கட்டிடம், 2 மீன் ஏலக் கூடங்கள், 2 வலை பின்னும் கூடங்கள், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கள், வாகனப் போக்குவரத்துக்கென சிமெண்ட் சாலைகள், மழைநீர் வடிகால், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், படகு இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நவீன இயந்திரம் மூலம் கடலைத் தூர் வாரி ஆழப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் மல்லிப்பட்டினம் துறைமுகத்தை திங்கள்கிழமை அன்று காலை காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு குத்து விளக்கேற்றி வைத்தார். பின்னர் துறைமுகத்தை பார்வை யிட்டு, அங்கிருந்த மீனவர்களிடம் துறைமுக வசதிகள் குறித்து கேட்ட றிந்தார்.  இந்நிலையில் மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவா சத்திரம் பகுதி மீனவர் சங்க நிர்வாகிகள், முன்னாள் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் வெங்கடாசலம், குருசேவ், ராஜமாணிக்கம், செல்வக்கிளி, மீனவராஜன், சின்னப்பிள்ளை, முகமது அலி ஜின்னா, ஜலீல், ராஜ்குமார், பெத்தையன், ஜமாத் தலைவர் அல்லாபிச்சை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மருமுத்து, முத்து ஆகியோர் அதிமுக ஒன்றியச்செயலாளர் நாடியம் சிவ.மதிவாணன் தலைமை யில், சட்டமன்ற உறுப்பினரை சந்தித்து துறைமுகம் அமைத்து தந்த தற்காக நன்றி தெரிவித்தனர்.  அவர்களிடம் சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு பேசுகை‌ யி‌ல், “தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றித் தந்து கொண்டிருக்கிறேன். மீனவர்கள் வேண்டுகோளான, தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வரையும், மீன்வளத்துறை அமைச்சரையும் சந்தித்துப் பேசி, கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக’ தெரிவித்தார்.