tamilnadu

img

ஹைட்ரோகார்பன் - மீத்தேன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்க!

அறந்தாங்கி, ஜூன் 22 - புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பேருந்து நிலையம் அருகே பயிர் காப்பீடு வழங்க கோரி விவசாயிகளின் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினர் கரு.இராமநாதன் தலைமை வகித்தார்.  2017-ல் விவசாயம் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் பயிர் காப்பீடு செய்த சென்ட்ரல் பேங்க் அம்மாபட்டினம்-கார்ப்பரேஷன் பாங்க் கோட்டைபட்டினம் ஆன்-லைன் முகாம்களில் பிரீமியம் செலுத்திய 350-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக பயிர் காப்பீடு வழங்க வேண்டும். 2018-ல் பருவமழை குறைவாக பெய்ததால் பல கிராமங்களில் பொதி பருவத்தில் பயிர் கருகிவிட்டது.

பாதிக்கப்பட்ட பகுதிகளை முறையாக கணக்கெடுத்து, காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீடு தொகை வழங்க வேண்டும். ஒரே சர்வே எண், ஒரே பட்டா எண்களை இரண்டு மூன்று இடங்களில் பதிவு செய்யும் போக்கை சம்பந்தப்பட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும். ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கியதை ரத்து செய்ய வேண்டும். கூட்டுறவு மற்றும் வங்கிகளில் வழங்கிய விவசாயிகள் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். மீனவர்களுக்கு வழங்கப்படும் மீன்பிடி தடை கால நிவாரணத் தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்கி, தன்ணீர் பற்றாக்குறையை போக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்த ப்பட்டன. விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் எஸ்.பொன்னுச்சாமி, மாவட்டப் பொருளாளர் சி.சுப்பிரமணியன், விதொச ஆறுமுகம், வாலிபர் சங்க மணமேல்குடி ஒன்றியச் செயலாளர் காளிதாஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

;