tamilnadu

img

விவசாயிகள் சங்கப் பேரவை

தரங்கம்பாடி, செப்.13- நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், திருக்கடையூர் அடுத்துள்ள டி.மணல்மேட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டப் பேரவை டி.இராசையன் தலைமையில் வெள்ளியன்று நடைபெற்றது. சங்கத்தின் மாநில துணை செயலாளர் சாமி நடராஜன், மாவட்ட செயலாளர் துரைராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜி.ஸ்டாலின், மாவட்டக்குழு உறுப்பினர் சண்முகம் ஆகியோர் உரையாற்றினர். விவசாய, விவசாயத் தொழிலாளர் சங்க வட்ட,கிளை உறுப்பினர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். நிறைவாக ஆறு.நாராயணசாமி நன்றி கூறினார்.