tamilnadu

img

டெல்டா மாவட்டங்களில் உற்சாகம்

திருச்சிராப்பள்ளி, மே 2-உழைக்கும் மக்களின் உன்னத திருவிழாவான மே தினம் டெல்டா மாவட்டங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மே தின கொடியேற்று விழா திருச்சி வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது. மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் தலைமை வகித்து கொடியை ஏற்றினார். மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, செயற்குழு உறுப்பினர் ஜெயபால், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சின்னசாமி, அன்வர் உசேன், சுமைப்பணி சங்க மாவட்டச் செயலாளர் ராமர், மாவட்டத் தலைவர் குணசேகரன், மணல் மாட்டு வண்டி சங்க தலைவர் சேகர், மாதர் சங்க புறநகர் மாவட்ட தலைவர் லிங்கராணி, திருச்சி தீக்கதிர் பொதுமேலாளர் பன்னீர்செல்வம் மற்றும் சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் லெனின் தலைமையில் இளையராஜா, மணிகண்டன், விஜயகுமார், விக்கி ஆகியோர் காவேரி பார்க், காமாட்சி அம்மன், பாஸ்போர்ட் ஆபீஸ், ஜீவா நகர், வள்ளுவர் நகர், மாரீஸ் தியோட்டர் ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் சிஐடியு கொடியை ஏற்றினர். காந்தி மார்க்கெட் பகுதியில் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா தலைமையில் ராமர், குணசேகரன், கோபிநாத், மணிகண்டன், விஜயன் ஆகியோர் ஸ்ரீமருத்துவமனை, மந்தை, அரிசிமண்டி, பூசணிகாய் மண்டி, வாழைக்காய் மண்டி, உப்பிலியதெரு, கீரைக்கடை ஆட்டோ ஸ்டாண்டு பகுதிகளில் சிஐடியு கொடியை ஏற்றினர். சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் அன்வர்உசேன் தலைமையில் சுபி, முத்துசாமி, நெடுஞ்செழியன், இளங்கோவன், மோகன் ஆகியோர் ஆண்டாள் தெரு, சின்னக்கடை வீதி, ராஜேஸ்வரி ஹாஸ்பிடல், தீப்பிரான் தொட்டி ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் சிஐடியு கொடியை ஏற்றினர்.

  சிபிஎம் கிழக்கு பகுதி செயலாளர் சிவக்குமார் தலைமையில் பாரதிசீனிவாசன், முரளிதரன், ஷாஜகான், சுரேஷ், ரெட்டமலை ஆகியோர் ஏபிடி பார்சல், செந்தண்ணீர்புரம், சங்கிலியாண்டபுரம், வரகனேரி, குட்செட் சுமைப்பணி ஆகிய இடங்களில் சிஐடியு கொடியை ஏற்றினர்.சிஐடியு திருச்சி புறநகர் மாவட்டக்குழு சார்பில் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் ஆட்டோ, மினிடோர் ஆட்டோ ஸ்டாண்ட், சாலை போக்குவரத்து சங்க அலுவலகம் ஆகிய இடங்களில் சிஐடியு புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜ் தலைமையில் சிஐடியு புறநகர் மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம், மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர், கட்டுமான சங்க பொறுப்பாளர் சக்திவேல் ஆகியோர் சிஐடியு கொடியை ஏற்றினர். திருச்சி பெல் சிஐடியு அலுவலகத்தில் சிஐடியு புறநகர் மாவட்ட பொருளாளர் சம்பத் கொடி ஏற்றினார். மாவட்ட துணைத்தலைவர் அருணன், பெல் சங்கபொதுச்செயலாளர் பிரபு, ராமகிருஷ்ணன் கலந்து கொண்டனர். 

துவாக்குடி 

துவாக்குடி பகுதியில் தங்கவேல், பழனிச்சாமி தலைமையில் கொடியேற்று விழா நடைபெற்றது. முசிறி பகுதியில் நடைபெற்ற விழாவில் சிஐடியு ராஜா, சிபிஎம் நல்லுச்சாமி, சுப்ரமணி, ரவி, பார்த்திபன், அழகேசன், மணிகண்டன் கலந்து கொண்டனர். திருச்சி சண்முகா நகர் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவிற்கு சங்க தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். தமுஎகச மாநில உதவி தலைவர் நந்தலாலா சிறப்புரையாற்றினார். பொருளாளர் வேலாயுதம், பெல் மருத்துவமனை ஊழியர் கஜேந்திரனின் மேஜிஷோ நடைபெற்றது.சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் உறையூர் குறத்தெருவில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் ராமச்சந்திரன், ராணி, ராமர், வீரமுத்து, சீனிவாசன், இ.பி.செல்வராஜ் ஆகியோர் பேசினர். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் சம்பத், மாநில துணை பொதுச்செயலாளர் வி.குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சிஐடியு திருச்சி புறநகர் மாவட்டக்குழு சார்பில் லால்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிஐடியு புறநகர் மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம், மாவட்டச் செயலாளர் சிவராஜ், மாநில துணை பொதுச்செயலாளர் கோபிகுமார், மாவட்ட பொருளாளர் சம்பத், அஇவிதொச மாநில துணை தலைவர் சந்திரன், சிபிஎம் லால்குடி ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், பிஎஸ்என்எல் மனோகரன் மற்றும் மாவட்டநிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முன்னதாக மே தின பேரணி நடைபெற்றது. தரைக்கடை வியாபாரிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் வரவேற்றார். கட்டுமான சங்க லால்குடி வட்டத் தலைவர் மோகன் நன்றி கூறினார். 

மன்னார்குடி

திருவாருர் மாவட்டத்தில் கட்சியின் மன்னார்குடிநகரக்குழு சார்பில் மஸ்தான் பள்ளித் தெரு, ஆனைவிழுந்தான் குளக்கரை, மஸ்தான் பள்ளித்தெரு, வார்டு எண் 29 ஆறாம் நம்பர் வாய்க்கால் உள்ளிட்ட இடங்களில் கட்சிக் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டன. நிகழ்ச்சிகளுக்கு நகர செயலாளர் ஏ.ஆறுமுகம் தலைமை வகித்தார். மூத்த தோழர் பி.சந்திரசேகரன், சிராஜுதீன், ஜி.ராதாகிருஷ்ணன், க.காளிமுத்து, பி.கலைச்செல்வி கட்சிக் கொடிகளை ஏற்றி வைத்தனர். நகரக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  சிஐடியு சார்பில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சிகளுக்கு மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.ரெகுபதி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் டி.முருகையன், போக்குவரத்துக் கழக பணிமனை முன்புசிஐடியு செங்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். ஆனைவிழுந்தான் குளக்கரை, வட்டாட்சியர் அலுவலகம், எல்ஐசி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சிஐடியு கொடி மற்றும் தோழமை சங்க கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டன. சிஐடியு இணைப்பு சங்கத் தலைவர்கள் ஏ.கோவிந்தராஜ், டி.ஜெகதீசன், ஏகாம்பரம், கே.சிவசுப்ரமணியன், அரசு ஊழியர் சங்கத் தலைவர்கள் கொடிகளை ஏற்றி வைத்தனர்.ஆட்டோ தொழிலாளர் சங்க சிஐடியு சார்பில் மாவட்ட பொருளாளர் பொன்.ஆறுமுகம் தலைமையில் மன்னார்குடியில் ஐந்து இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நகர சிஐடியு பொறுப்பாளர் கே.அகோரம் முன்னிலை வகித்தார். ரயில் நிலையம் எதிரில் மே தின நிகழ்ச்சிகள் துவங்கின.கிளை பொறுப்பாளர்கள் பிரகாஷ், மதியழகன், கணேசன், செல்வகுமார், உள்ளிட்டோர் சிஐடியு கொடிகளைஏற்றி வைத்தனர். மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.ரெகுபதி, தோழமை சங்க நிர்வாகிகள் டி.ஜெகதீசன், ஜி.தாயுமானவன், சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன், நகர செயலாளர் ஹரிகரன் கலந்து கொண்டனர். 

நீடாமங்கலம்

நீடாமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றநிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளர் சோம ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் கே.கைலாசம் முன்னிலை வகித்தார். கட்சிக் கொடியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் நா.பாலசுப்பிரமணியன் ஏற்றி வைத்து உரையாற்றினார். நகர செயலாளர் சி.டி.ஜோசப், மாதர் சங்க மாவட்ட தலைவர் ரெ.சுமதி, பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட செயலாளர் ப.ரெத்தினம், தமுஎகச மாவட்டதுணைச் செயலாளர் சு.அம்பிகாபதி கலந்து கொண்டனர். நீடாமங்கலம் பெரியார் சிலை அருகில் சிஐடியு கொடியை விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள் ஏற்றி வைத்தார். கார், வேன் ஓட்டுநர் சங்கம் சார்பில் நிர்வாகி சீனிவாசன் கொடியை ஏற்றி வைத்தார். 

சிபிஎம்-இல் இணைந்தனர்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் வலங்கைமான் ஒன்றியத்தில் கொக்கலாடி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஒன்றிய செயலாளர் என்.ராதா தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேகர், மாவட்ட குழு உறுப்பினர் கே.சுப்ரமணியன் முன்னிலையில் ஒன்றிய 45 கிராமங்களில் கொடியேற்றப்பட்டது. பாதிரிபுரம் கிராமத்தில் நகர செயலாளர் எஸ்.சாமிநாதன் தலைமையில் கொடியினை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேகர் எடுத்துக் கொடுக்க மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி கொடியினை ஏற்றினார். கொடியேற்று நிகழ்ச்சியின் போது பாதிரிபுரம் கிராமத்தில் இருந்து மாற்று கட்சியிலிருந்து விலகி 23 தோழர்கள் ஜி.கலியபெருமாள், வி.பரமகுரு ஆகியோர் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். அவர்களை வரவேற்று கட்சியில் இணைத்துக் கொண்டு மாவட்டச் செயலாளர் ஜி.சுந்திரமூர்த்தி சிறப்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேகர், மாவட்ட குழு உறுப்பினர் கே.சுப்ரமணியன் கலந்து கொண்டனர். சிபிஎம் கிளை செயலாளர் கே.முரளி நன்றி கூறினார்.

கொரடாச்சேரி ஒன்றியம் 

கொரடாச்சேரி ஒன்றியத்தில் செங்கொடி ஏற்றிகொண்டாடப்பட்டது. ஒன்றிய செயலாளர் கே.சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கந்தசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.தம்புசாமி மற்றும் தோழமைசங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். குடவாசல் கட்சியின் மைய அலுவலகத்தில் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.லெட்சுமி தலைமையில் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி செங்கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் எப்.கொரக்கோரியா, முன்னாள் பேரூராட்சித் தலைவர் டி.அய்யாறு மாதர் சங்க ஒன்றிய செயலாளர் ஜெகதீஸ்வரி கலந்து கொண்டனர்.

திருத்துறைப்பூண்டி 

திருத்துறைப்பூண்டி நகரம் மற்றும் ஒன்றியங்களில் மே தின கொடி ஏற்றப்பட்டது. திருத்துறைப்பூண்டியில் கட்சியின் நகர செயலாளர் கே.ஜி.ரகுராமன் தலைமையில் ஒன்றிய செயலாளர் காரல்மார்க்ஸ் முன்னிலையில் கட்சி கொடியினை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் ஏற்றி வைத்து சிறப்புறையாற்றினார். பி.எஸ்.ஆர்.சிலையில் கட்சிகொடியினை மாவட்டக்குழு உறுப்பினர் டி.சுப்ரமணியனும், சிஐடியு கொடியினை மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சாமிநாதனும் ஏற்றி வைத்தனர். வலங்கைமான் தாலுகா மேலவிடையல் ஊராட்சி நல்லம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டக் குழு உறுப்பினர் எம்.சேகர், ஒன்றியச் செயலாளர் என்.இராதா, மாவட்ட செயற்குழு கே.சுப்ரமணியன், பாலையா, நகரச் செயலாளர் சாமிநாதன், மாணவர் சங்க மாவட்ட செயற்குழு ரகுராமன் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சை மாவட்டக்குழு கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் தலைமை வகித்தார். கட்சியின் கொடியை மாநிலக்குழு உறுப்பினர் என்.சீனிவாசன் ஏற்றி வைத்தார். சிஐடியு கொடியை த.முருகேசன் ஏற்றி வைத்தார். கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் சரவணன், இராஜன், நகரச் செயலாளர் ந.குருசாமி பி.செந்தில்குமார், கரிகாலன், வடிவேலன், செங்குட்டுவன், வசந்தி, சாந்தா,மாணவர் சங்க நகரச் செயலாளர் அருண், வாலிபர் சங்க நகரத் தலைவர் ஹரிபிரகாஷ் கலந்து கொண்டனர். கட்சியின் தஞ்சாவூர் ஒன்றியம் சார்பில் அற்புதபுரம், ராவுசாபட்டி, ஏழுப்பட்டி, திருமலைசமுத்திரம், வல்லம் உள்ளிட்ட இடங்களில் கொடியேற்றி வைக்கப்பட்டது. தஞ்சை ஒன்றியச் செயலாளர் எம்.மாலதி, மாவட்டக்குழு உறுப்பினர் கே.அபிமன்னன், சிஐடியு மாவட்டத் தலைவர் டி.கோவிந்தராஜ் கலந்து கொண்டனர். கட்சியின் பூதலூர் தெற்கு ஒன்றியம் சார்பில் செங்கிப்பட்டி, வெண்டயம்பட்டி, சொரக்குடிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் கொடியேற்றி வைக்கப்பட்டது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.வி.கண்ணன், ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் கலந்து கொண்டனர். கட்சியின் பூதலூர் வடக்கு ஒன்றியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெ.ஜீவகுமார், ஒன்றியச் செயலாளர் கே.காந்தி கலந்து கொண்டனர். 


;