தஞ்சாவூர், ஜூன் 27- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி காவல்துறை சார்பில், புதன்கிழமை சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. காவல் உதவி ஆய்வாளர் இல.அருள்குமார் தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்து பேசினார். பேரணி நீலகண்டப்பிள்ளையார் கோயிலில் இருந்து கடைவீதி வழியாக வட்டாட்சியர் அலுவலகம் வரை சென்றடைந்தது. தொழிலதிபர் சபரி குமார், உடற்கல்வி இயக்குநர்கள் ரெங்கேஸ்வரி, அன்னமேரி, ஆசிரியை உஷாநந்தினி மற்றும் பேராவூரணி அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.