திருச்சிராப்பள்ளி, ஆக.16- விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் பயன்பட்டு வந்த கார்வாய்க்கால் தூர்வாரப்படாமல் கழிவு நீர் சாக்கடையாக மாற்றிய மாநகராட்சியை கண்டித்தும் கழிவுநீரால் கொசுக்கள் உற்பத்தியாகி சுற்றுப்புற மக்கள் யானைக்கால் நோய், டெங்கு காய்ச்சல் நோய் பாதிக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஸ்ரீரங்கம் பகுதிக்குழு சார்பில் புதனன்று திருவானைக்காவல் நாலுகால் மண்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஸ்ரீரங்கம் பகுதி சங்க பொருளாளர் சந்துரு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநகர் மாவட்ட தலைவர் சந்திர பிரகாஷ், மாநகர் மாவட்ட செயலாளர் லெனின், ஸ்ரீரங்கம் பகுதி தலைவர் ஜெயக்குமார், ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா ஆகியோர் பேசினர். சுப்ரமணி, கண்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஸ்ரீரங்கம் பகுதி துணை செயலாளர் லோகநாதன் நன்றி கூறினார்.